பொது செய்தி

தமிழ்நாடு

'ஏரிகளை நிரப்பும் திட்டம் 2021 ஜன.,ல் நிறைவேறும்'

Added : மே 24, 2020
Share
Advertisement

இடைப்பாடி: ''சரபங்கா ஆற்று வடிகாலில் உள்ள, நூறு ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், ஜனவரிக்குள் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
இடைப்பாடி சட்டசபை தொகுதி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் ராமன் தலைமையில், இடைப்பாடியில் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பல்வேறு துறைகள் மூலம் நடக்கும் திட்டம், வளர்ச்சி பணிகள், குடிமராமத்து திட்டம் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசித்தார்.

பின், முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை உபரிநீரை, சரபங்கா ஆற்று வடிகாலில் உள்ள, 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் கொண்டு வரப்படும். இதற்கான, 565 கோடி ரூபாய் திட்டம், கடந்த மார்ச்சில் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பணி முடிந்து, மக்கள் பயனடைவர். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X