தமிழ்நாடு

கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Added : மே 24, 2020
Share
Advertisement

சேலம்: ''அரசு அறிவித்த வழிமுறை, சரியாக செயல்படுத்தியதால், 'கொரோனா' இல்லாத மாவட்டமாக, சேலம் மாறிவிட்டது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டம் நடந்தது. பின்னர் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 'கொரோனா' பரவலை தடுக்க, என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிய நிவாரணம், நிலவும் பிரச்னை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது கோடைகாலம் என்பதால், ஆங்காங்கே நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு அறிவித்த வழிமுறை, சரியாக செயல்படுத்தியதால், 'கொரோனா' இல்லாத மாவட்டமாக, சேலம் மாறிவிட்டது. மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், 35 பேர். அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 14 ஆயிரத்து, மூன்று பேருக்கு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து, சேலம் வந்த, 2,539 பேருக்கு நடத்திய சோதனையில், 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து சேலம் வந்த, 1,891 பேரில், ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, ஒருவர் குணமாகி வீடு திரும்பிவிட்டார். ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர். அதனால், மாவட்டத்தில் ஒருவருக்கு கூட, தொற்று இல்லை.

மாவட்டத்தில், புலம் பெயர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 14 ஆயிரத்து, 800 பேரில், 8,200 பேர் விருப்பப்படி சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தனர். அவர்களில், 2,250 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர், ரயில் மூலம் அனுப்பும் பணி, அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை, 14 ஆயிரத்து, 753 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 7,524 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர் குணமடைந்து வீடுதிரும்பினர். 98 பேர் இறந்துள்ளனர். தமிழகம் வந்த, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களில் பாதிக்கப்பட்டோர், 759 பேர். மருத்துவ குழு பரிந்துரைப்படி, நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், தூய்மை பணியாளர், வருவாய், ஊரகம், போலீஸ் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், தமிழகத்தில், 'கொரோனா' கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை: கோடையில் குடிநீர் பிரச்னையை போக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள, அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், குடிமராமத்து திட்டத்தை, அனைத்து மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்த, அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி, இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்த பின், அது, கடைமடை விவசாய பகுதிக்கும் தங்குதடையின்றி சென்று சேருவதை உறுதிப்படுத்த, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X