கொரோனா தடுப்பு முகாமில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு முகாமில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : மே 24, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மன நல திட்டம் சார்பில், ராசிபுரம் அடுத்த கீரனூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முகாமில், கர்நாடகத்தில் மலையில் கூலி வேலை செய்த, கொல்லிமலையை சேர்ந்த, 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பயம், பதற்றம், மன அழுத்தத்தை போக்க மன நல விழிப்புணர்ச்சி நடத்தப்பட்டது. இதில், மனநல மருத்துவர் ஜெயச்சந்திரன் பேசியதாவது: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமி. நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக பரவுகிறது. மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது, கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன. அவ்வாறு கிருமிகள் ஒட்டியுள்ள கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தை தொடும்போது இந்நோய் தொற்று ஏற்படுகிறது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம், 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மனஅழுத்தம் ஏற்படும்போது, மூச்சுப் பயிச்சி மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X