பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Chennai, CoronaVirus, CoronaCases, Corporation, zones, covid 19, corona, tn, tamil nadu, சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மண்டல வாரியாக

சென்னை: சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று (மே 23) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 759 பேரில், சென்னையில் மட்டும் 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது. இதில் 59.99 சதவீதம் ஆண்கள், 39.99 சதவீதம் பெண்கள் மற்றும் 0.02 சதவீதம் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இதுவரை 4043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், 71 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 5815 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,889 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news
latest tamil news

சிறப்பு வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்


சென்னையில் தினமும் பாதிப்பு அதிகரித்து வருவதால், நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது. அதேபோல், நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.


latest tamil news

ரூ.7.41 கோடி அபராதம்


தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றிய 5,21,964 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4,90,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 4,18,337 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மண்டல வாரியாக மொத்த பாதிப்பு:


ராயபுரம் - 1889
கோடம்பாக்கம் - 1391
திரு.வி.க.நகர் - 1133
தேனாம்பேட்டை - 1054
தண்டையார்பேட்டை - 974
அண்ணாநகர் - 829
வளசரவாக்கம் - 679
அடையாறு - 533
அம்பத்தூர் - 415
திருவொற்றியூர் - 274
மாதவரம் - 213
சோழிங்கநல்லூர் - 160
பெருங்குடி - 152
மணலி - 126
ஆலந்தூர் - 107
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் - 60

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202009:47:53 IST Report Abuse
Sampath Kumar ஆடிய ஆட்டம் என கொஞ்சமா ? அனுபவிங்கோட பாக்கிகளை
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
24-மே-202020:56:05 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy மக்களை இனிமேலும் அடைத்து வைப்பதில் எந்த பலனும் இல்லை. அனைத்தையும் திறந்து விடுங்கள் டாஸ்மாக் உட்பட. நோய் வந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்லட்டும். கட்டுப்பாடற்ற, சுய ஒழுக்கமற்ற ஒரு சாராரால் மற்றவர்களின் வாழ்வாதாரம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
Rate this:
Cancel
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
24-மே-202017:46:44 IST Report Abuse
SANKARAN NAGARAJAN இன்று மீன் மார்கெட்டில் அளவு கடந்த கூட்டம் ,நாளை எந்த அளவுக்கு வைரஸ் பரவியுள்ளது என்று தெரியும் ,காவல்துறை ,மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் ??? இதில் ஸ்பெஷல் அதிகாரி வேறு ,பாவம் மக்கள் ,இதற்கும் முதல்வர் தான் வரவேண்டுமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X