அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம்; திமுக தீர்மானம்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
திமுக, தீர்மானம், ஊழல், கண்டனம், கூட்டம், DMK, corruption, AIADMK, Tamil Nadu, TN news, politics, TN district, TN government, TN govt, political party

சென்னை: அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிடவும், தமிழக அரசின் பொய் வழக்குகளை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் குழு அமைக்கவும் திமுக எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 24) காலை காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் துவக்கத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்களை அதிமுக அரசு கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய திமுக சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் குழு அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக அரசின் அநீதியை தட்டிக் கேட்கவும், அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிடவும், பாதிக்கப்படும் தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து பாதுகாக்கவும் வழக்கறிஞர் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தோழர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை பொய் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
26-மே-202009:52:15 IST Report Abuse
Sampath Kumar பட்டியல் இட்டு அந்த பேப்பரில் பண்ருட்டி பலாப்பழம் வைத்து தின்னுக
Rate this:
Cancel
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
25-மே-202015:53:58 IST Report Abuse
Parthasarathy Ravindran ஒன்றும் இல்லாத உங்களுக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது . தமிழ் நட்டு மக்களுக்கு கூறமுடியுமா.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202003:56:57 IST Report Abuse
J.V. Iyer இதில் கைதேர்ந்த ஊழல் மன்னர்களுக்குத்தான் ஊழல் எப்படி நடந்திருக்கும், எங்கே நடந்திருக்கும், எவ்வளவு அடித்து இருப்பார்கள் என்று நன்றாக தெரியும். பலே இதில் ஊழல் பரம்பரை சொல்வதை நம்பத்தான் வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X