கொரோனா காலத்தில் சலூனுக்கு செல்வது ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
CoronaVirus, Salon, barber shops, beauty parlour, Symptomatic, Exposed, Virus, Positive, corona spread, corona cases, corona news, positive cases, india, coronavirus, corona, covid-19, கொரோனா, வைரஸ், சலூன் கடைகள், ஆபத்து, மருத்துவர்கள், எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் சலூன் கடை ஒன்றில் கொரோனா பரவி உள்ளது. அங்கு முடி திருத்திக்கொள்ள வந்த 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு நாட்களாக கொரோனா பாதித்த அழகுகலை நிபுணர் அங்கு பணியாற்றி உள்ளார்.
வாடிக்கையாளர்களுடன் சேர்த்து 8 சக பணியாளர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் முடி திருத்தும் பணியாளர்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஆபத்தானது என மருத்துவர்களில் சிலர் கருதுகின்றனர்.


latest tamil news



மருத்துவர்களது கூற்றுப்படி முடி வெட்டுபவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்கள் கட்டாயம் முக கவசம், கிளவுஸ் அணிய வேண்டும். அவர்களது எச்சில், கபம் ஆகியவற்றில் உள்ள கொரோனா வைரஸ் கத்தரிக்கோல், சீப்பு, சவரக்கத்தி, பிளேட் மூலமாக வாடிக்கையாளரது கண்கள், காதுகள், மூக்கு அருகே செல்லும்போது கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஷேவ், தாடியை டிரிம் செய்யும்போது வாய்ப்பகுதி மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த சமயத்தில் சலூனுக்கு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
24-மே-202016:42:35 IST Report Abuse
Suppan ஸெல்ப் ஷேவிங் மாதிரி ஸெல்ப் கட்டிங் கற்றுக் கொண்டுவிடுங்கள்
Rate this:
Cancel
GNANAM - THENI,பூடான்
24-மே-202013:16:36 IST Report Abuse
GNANAM தமிழ்நாட்டில் நாங்க கேட்க மாட்டோம் எங்களுக்கு சப்போர்ட் கு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X