சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடுமலை அருகே ரூ.16 லட்சம் கொள்ளை

Added : மே 24, 2020
Share
Advertisement
உடுமலை அருகே ரூ.16 லட்சம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பிரிவு பகுதியில் வசித்து வருபவர் உரக்கடைகளும் ,நிதி நிறுவனம் நடத்தி வருபவர் பழனிச்சாமி(74) .இவர் வீட்டில் அதிகாலை 2.30 மணி யளவில் முக மூடி கொள்ளைகள் முன்பக்க கதவு உடைத்து பழனிச்சாமி இருக்கும் அறைக்கு சென்று முகமூடி கொள்ளையர்கள் அரிவாளை கொண்டு பணம் ,நகைகள் எங்கு உள்ளது என மிரட்டி உள்ளார்கள்.பழனிச்சாமி பதில் ஏதும் கூறாத நிலையில் ஆத்திரம் அடைந்த முகமூடி கொள்ளையர்கள் அரிவாளை கொண்டு பழனிச்சாமி தாக்கி உள்ளனர்.பின்னர் பணம் இருக்கும் இடத்தை கூறியதும் ,முகமூடி கொள்ளையர்கள் ரூ.16 லட்சம் ரொக்க பணத்தையும் ,வீட்டில் இருந்த 6 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் கொள்ளை யடித்து சென்றனர்.மேலும் அதிகாலையில் கொள்ளையடிக்க வந்த மூக மூடி வீட்டின் முன்னாள் இருந்த சி.சி.டிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து ,ஹார்ட்டிஸ்குகளையும் தூக்கி சென்றனர்.இதற்கிடையில் அரிவாளில் தாக்கி கட்டி போட்டி பழனிச்சாமி தவழ்ந்து வந்து சத்தம் போட வீட்டில் அனைவரும் உள்ளே வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காலல் துறையினர்க்கு தகவல் தெரிவித்த பின் திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திஷா மிட்டல் அவர்கள் தலைமையில் காவல் துறையினர் இடத்தில் வந்து தீவிர விசாரணை செய்தனர்.மேலும் கைரேகை நிபுரணர்களும் ,அர்ஜின் என்ற மோப்ப நாய் வரவழைக்க பட்டும் தீவிர சோதணை செய்யப்பட்டது. உடுமலை பகுதியில் அதிகாலை நேரத்தில் உரக்கடை உரிமையாளர் மற்றும் நிதி நிறுவன அதிபரை அரிவாளில் தாக்கி கட்டி போட்டு விட்டு பல லட்சங்கள் மற்றும் சொகுசு கார் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X