ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: உத்தவ்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், சிகிச்சை, உத்தவ்தாக்கரே, உத்தவ், மஹாராஷ்டிராமுதல்வர், விமானசேவை, Maharashtra, Maha CM, Maharashtra Chief Minister, Uddhav Thackeray, COVID-19 patients, Mumbai, BMC, Coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases, positive cases, corona patients, hospitals, fight against corona

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமாக ஆக உள்ளது. இருப்பினும் யாரும் கவலைப்பட தேவையில்லை. மருத்துவ துறையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். வயதானவர்கள் அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. நிறைய நோயாளிகளுக்கு வென்டிலேட்டரை விட ஆக்சிஜன், ரத்தம் தேவைப்படுகிறது. அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.


latest tamil news



பருவமழை காலம் வர உள்ளது. இதனால், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். மழை காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா அறிகுறி தெரிந்தால், உடனடியாக உதவி எடுத்து கொள்ளுங்கள். விமான சேவையை துவக்குவதற்கு ஏற்பாடு செய்யகூடுதல் அவகாசம் தேவை. இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் பேசியுள்ளோம்.

பொருளாதார நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம். இதனை படிப்படியாக துவக்குகிறோம்.மே 31 அன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என நாங்கள் கூறவில்லை. ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது தவறு. அதனை உடனடியாக நீக்கிவிட முடியாது. நாம் எப்படி முன்னேறி செல்ல போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் இனி வரும் காலங்களில் தான் அதிகரிக்கும் என்பதால், அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் சேவை துவக்க மத்திய அரசு முதலில் மறுப்பு தெரிவித்தது. போதிய ரயில் சேவை கிடைக்கவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக தேவைப்படும் உதவிகளை மாநில அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-202005:56:25 IST Report Abuse
meenakshisundaram கள்ளத்தனமான முதல்வர் ஆகி, இப்போ அந்த பதவியையும் நிரந்தரம் செஞ்சாச்சு ,இனி என்ன? அறிக்கை மேல அறிக்கை விட வேண்டியது thane ?யார் வீட்டு பணம்?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-202020:10:50 IST Report Abuse
Janarthanan இங்கே தொழிலர்களுக்கு ட்ரெயின் இல்ல கதை விட்டு இருக்கிறார்?? ரயில்வே மினிஸ்டர் ஒரு மணி நேரத்தில் 125 ட்ரெயின் ரெடியாக இருக்கு தொழிலாளர்கள் லிஸ்ட் கொடுங்க என்று கூறி உள்ளார்???போன முறையும் இப்படி தான் சொதப்பி உள்ளார்கள் மஹா அரசு, ஒழுங்கா ஏற்பாடு செய்யாமல் ட்ரெயின் நிறைவு செய்யமால் விட்டு உள்ளார்கள்??மத்திய அரசிற்கு நஷ்டம் ஆக்க வேண்டும் என்ற எண்ணமோ??
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-202019:58:59 IST Report Abuse
Janarthanan ராஜமாதா சொல்லுவதை கேட்டு தலையாட்டினால் மஹாவை இத்தாலி ஆக தான் மாற்ற போகிறீர்கள்??? சுயமா சிந்தீங்க??
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
24-மே-202022:10:22 IST Report Abuse
Nallavan Nallavanஏன் மஸ்தான் மஹாபாரதம் 18 நாள் தான் அனால் நான் கொரானாவை 21 நாட்களில் கழட்டுவேன் என்று சொன்னானே ஒருத்தன் என்ன ஆச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X