மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வெற்றி: சீனா அறிவிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Coronavirus, corona Vaccine, China, COVID-19, Developed, Promising, Results, Early Trials, corona, corona outbreak, corona updates, corona drug, corona test, corona spread, corona, கொரோனா, வைரஸ், தடுப்புமருந்து, சீனா, கோவிட்-19,

பெய்ஜிங்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு இன்றளவும் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அதிகாரப்பூர்வமாக உறுதியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சீனா, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளதாகவும், இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது மற்றும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது.


latest tamil news


இந்த ஆய்வுக்காக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுவாக பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அவர்களது உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை. தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளதே இதன் பொருளாகும். இது சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. இந்த தடுப்பு மருந்துக்கு Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையின் வெற்றி, அடுத்தக்கட்ட சோதனைகளை தொடர வழி செய்துள்ளது. இவ்வாறு ஆய்விதிழில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


முதல்கட்ட சோதனை மனிதர்களுக்கு வெற்றியடைந்ததால், அடுத்தக்கட்ட சோதனைக்கு 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்க சீனா முடிவுசெய்துள்ளது. மேலும், ShaCoVacc மற்றும் PiCoVacc ஆகிய 2 தடுப்பு மருந்துகளையும் மனிதர்களிடம் பரிசோனை செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் சீனாவின் முதல்கட்ட வெற்றி, ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
28-மே-202019:26:09 IST Report Abuse
Tamilnesan செய்வினை செஞ்சவனுக்கு தான் எடுக்கவும் தெரியும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-மே-202022:02:11 IST Report Abuse
தல புராணம் சீனா உயிரிழப்புகளை குறைத்து சொல்லியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதை தவிர சீனாவிடம் எந்த கொடிய உள்நோக்கமும் இருந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்தியாவில் கூட சாவுகள் எண்ணிக்கை பெருமளவு குறைத்து சொல்லப்படுகிறது. நோய் தொற்று பரிசோதனை செய்து அது பாசிட்டிவ் என்று வந்து, அதனால் பிறகு இறந்தவர்களை மட்டுமே நோயால் இறந்தவர்களின் கணக்கில் சேர்க்கிறார்கள். பரிசோதனை செய்யாமல் பல்லாயிரம் பேர் நோயில் இருக்கிறார்கள், இறக்கிறார்கள்.. அந்த சாவுகளை சாதாரண சாவுகள் கணக்கில் சேர்த்து தில்லாலங்கடி நடக்கிறது. உண்மை இரண்டு மூன்று வருடங்கள் கழித்து நாட்டின் தினசரி சாவுகள் எண்ணிக்கை வெளியே தெரியவரும் போது மட்டுமே இந்த தில்லாலங்கடி தெரியவரும். 2020 இல் அசாதாரணமாக தினசரி சாவுகள் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதை அறிவோம். அப்போ இன்றைய மூடர் கூடம் ஆட்சியில் இருக்காது.
Rate this:
26-மே-202021:56:46 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜாமூடர் கூட ஆட்சி உன் சொந்த நாடான பாக்கில் தான் நடக்கிறது பொதுக்கூட்டம் வைத்து நோயை பரப்புனவனெல்லாம் ஆட்சியை பத்தி பேசுறம்பா......
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
24-மே-202021:31:47 IST Report Abuse
sundarsvpr சீனா செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக பாவ மன்னிப்பு தான் மருந்து. மன்னிப்பை ஏற்பதுதான் தர்மம். இப்பொது தேவை நேர்முறை சிந்தனை. காரண காரியம் இல்லாமல் எதுவும் இயங்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X