ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம்: கண்ணீர்புகை குண்டுவீச்சு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சீனா, ஹாங்காங், தேசியபாதுகாப்புசட்டம், போராட்டம், கண்ணீர்புகைகுண்டு, china, hong kong, national security act, tear gas, protesters, HK police, rally, Beijing, national security law

ஹாங்காங்: சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடந்தது. இதில், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த 1997ம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கம், அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன பார்லிமென்டில் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஹாங்காங்கில் எதிர்ப்பு கிளம்பியது. இது தங்கள் பகுதி தன்னாட்சிக்கு எதிரானது என ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


Advertisement

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டம் நடந்தது. கவுஸ்பே மற்றும் வன் சாய் மாவட்டங்களில் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த ஆயிரகணக்கானோர் ஒன்று கூடினர். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர். மாணவர்கள், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். ஒரு சிலர் ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கேட்டும் கோஷம் எழுப்பினர்.


latest tamil news



அங்கு வந்த போலீசார் , போராட்டக்காரர்களை கலைந்து போக செய்யும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மறுக்கவே, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீயச்சி அடித்தும் விரட்ட முயற்சித்தனர். பெப்பர் பந்துகளை வீசவும் செய்தனர். ஒர சில இடங்களில் போராட்டக்காரர்களை கைது செய்தனர். தங்கள் மீது குடை மற்றும் தண்ணீர் பாட்டீல்களை வீசியதால், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-மே-202018:54:38 IST Report Abuse
வெகுளி ஹாங்காங்கில் சீனா நடத்தும் அடக்குமுறைகளை கண்டித்து அருணனும் பிற அல்லக்கைகளும் கூவுவார்களா?....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
24-மே-202018:49:59 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியா ஹாங்காங்குக்கு ஆதரவு தெரிவிக்கணும் .......... சீனா காஷ்மீரைப் பத்தி, லடாக் பத்தி பேசும்போது நாமளும் ஹாங்காங் பத்தி பேசலாமே ????
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா சூப்பர்... உலக நாடுகள் ஆங்காங்கை தனி நாடாக மாற உதவி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X