பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், பிரதமர் நிவாரண நிதி, பிஎம்கேர்ஸ், நிவாரணநிதி, சம்பளம், சிடிஎஸ், சிடிஎஸ்பிபின்ராவத்,  CDS Bipin rawat, cds, chief of defence staff, bipin rawat, PM Cares fund, salary, Defence Ministry, Armed Forces, COVID-19 relief fund, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, delhi, india, corona crisis, relief fund

புதுடில்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, அடுத்த ஒராண்டிற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளார். இதற்காக பாதுகாப்புஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி ஒரு மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட 'பிஎம் கேர்ஸ்' நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பலரும் நிதி அளித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரணமாக அளித்தனர்.இதனை தொடர்ந்து, பிபின் ராவத், அடுத்த ஒராண்டிற்கு, தனது மாத சம்பளத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் பிடித்து கொள்ளும்படி , கடந்த மார்ச் மாதம், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று கொண்டு, ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்து, அது 'பிஎம்கேஸ்' நிதியில் சேர்க்கப்பட்டதாக பதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள், ஒராண்டிற்கு, மாத சம்பளத்தில், ஒரு நாள் சம்பளத்தை, 'பிஎம்கேர்ஸ்' நிதிக்கு தாமாக முன்வந்து வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், மற்ற உயர் அதிகாரிகளையும் ஊக்குவிக்கவே , ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை 'பிஎம்கேர்ஸ்'க்கு வழங்கியுள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரும், கடலோர காவல்படையின் முன்னாள் உறுப்பினருமான ராஜேந்திர சிங்கும், தனது சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை நீஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளார்.
ராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் ஏராளமான உயரதிகாரிகளும் நிதி வழங்கி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ஆயுதப்படைகள் சார்பில் முன்னின்று செயல்படும் பிபின் ராவத், சுகாதார அமைச்சகம் சார்பில் நடக்கும் கூட்டத்தில் பிபின் ராவத் கலந்து கொள்கிறார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் , முப்படையினரை தயார் படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
25-மே-202007:16:45 IST Report Abuse
arudra1951 சோழியன் குடுமி சும்மா ஆடாது ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவான்
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202022:38:52 IST Report Abuse
babu இராணுவத்தில் அரசியல் கலப்பு. மிக உயரிய தேசபக்தர்கள்.
Rate this:
Cancel
24-மே-202022:27:23 IST Report Abuse
A. V. K. Saai Sundhara Murthy வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X