நடிகை மிருணாளினியின் கொரோனா காலம்| Dinamalar

நடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்'

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
அழகு நிலவில் அரைவட்டமாய் மையிட்ட புருவங்கள் சதிராட ஜாடை காட்டி மோகம் கூட்டும் கண்கள்தேன்சிந்த துடிக்கும் செவ்விதழ் பூவாய் சிவந்த அதரங்கள் மழலைபோல் உளறும் கெஞ்சல்நய பேச்சு, வெள்ளுடை தேவதைக்கும் கள்ளுண்ட மயக்கம் தரும் பேரழகி... 'டப்ஸ் மாஷ்'சில் மாஸ் காட்டி வெள்ளித்திரையில் வித்தை காட்டும் நடிகை மிருணாளினி மனம் திறந்தது* பிறந்து வளர்ந்தது? பிறந்தது
நடிகை மிருணாளினியின் 'கொரோனா காலம்'

அழகு நிலவில் அரைவட்டமாய் மையிட்ட புருவங்கள் சதிராட ஜாடை காட்டி மோகம் கூட்டும் கண்கள்தேன்சிந்த துடிக்கும் செவ்விதழ் பூவாய் சிவந்த அதரங்கள் மழலைபோல் உளறும் கெஞ்சல்நய பேச்சு, வெள்ளுடை தேவதைக்கும் கள்ளுண்ட மயக்கம் தரும் பேரழகி... 'டப்ஸ் மாஷ்'சில் மாஸ் காட்டி வெள்ளித்திரையில் வித்தை காட்டும் நடிகை மிருணாளினி மனம் திறந்தது


* பிறந்து வளர்ந்தது?


பிறந்தது புதுச்சேரி. வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரு. இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தேன். நடிக்க வந்து விட்டதால் வேலையை விட்டு விட்டேன்.


* வெள்ளித் திரையில் எப்படி?

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் போது ரிலாக்ஸூக்காக 'டப்ஸ் மாஷ்' பண்ணினேன். நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. அந்த டப்ஸ் மாஷால் கிடைத்தது தான் வெள்ளித்திரை வாய்ப்பு. முதல் படம் 'சூப்பர் டீலக்ஸ்'.


* அம்மா செல்லமா?

அம்மா, அப்பா ரெண்டு பேரின் செல்லம் நான். இருந்தாலும் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் மிரட்டல் அம்மாக்கிட்ட இருந்து கிடைக்கும். ஏன்னா அம்மா டீச்சர். ரொம்ப கண்டிப்பான டீச்சரா இல்லாட்டியும், வீட்ல கண்டிப்பா நடந்துப்பாங்க. ஷூட்டிங்கிற்கு அம்மாவும்கூட வருவாங்க.


* நடிப்புக்கு ஐடியா, அம்மாவா?

அய்யய்யோ அம்மாவுக்கு ஷூட்டிங்கெல்லாம் பிடிக்காது. எனக்காக தான் கூட வருவாங்க. நான் சரியா சாப்பிடுறேனா, துாங்குறேனானு பார்த்துக்குறதுதான் அவங்க வேலையே. 'ஷூட்டிங் ஸ்பாட்' போரடிக்குதுனு சொல்வாங்க.


* பிடித்த கேரக்டர்?

எங்க குடும்பத்துல இதுவரை யாருமே சினிமா பக்கம் போனதில்லை. முதல் ஆளு நான் தான். பிடித்த கேரக்டரெல்லாம் பிரித்து பார்க்க முடியாது. நான் ரொம்பவே ஜாலியான ஆளு. அதனால், அப்படி ஒரு கேரக்டர் கிடைச்சா சும்மா அடிச்சி காலி பண்ணுவேன்.


* கொரோனா காலம்?

ஊரடங்கால் புதுச்சேரியில் என் பாட்டி வீட்டில் மாட்டிக்கிட்டேன். பொழுது விடிஞ்சாலும் ராத்திரியானாலும் சினிமாதான். அப்பப்ப பாட்டியோட சமையலுக்கு உதவியாக இருப்பேன். அப்புறம் ஆன்லைனில் டிப்ளமோ நியூட்ரிஷன் கோர்ஸ் சேர்ந்து படிக்கிறேன். கிடைக்குற நேரத்தை பயனுள்ளாத செலவு பண்ணனும். ஏன்னா காலம் பொன் போன்றது. ஒரு தடவ மிஸ் பண்ணிட்டா. அப்புறம் பீல் பண்ணுவீங்க.


* நடித்துள்ள படங்கள்?

வால்மீகி, சாம்பியன் ரிலீஸாகி விட்டது. எம்.ஜி.ஆர்., மகன், கோப்ரா படங்கள் ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸாகும்.


* தனித் திறமைகள்?

அம்மாவிடம் இருந்து நல்லா சமையல் பண்ண கத்துக்கிட்டேன். சிக்கன், மட்டன், பனீர் மசாலானு வகையா சமைக்க தெரியும். என் சமையலுக்கு பேமிலியில் நிறைய ருசிகர்கள் இருக்காங்க. சும்மா... தரமா... கெளப்பிடுவேன்...
இன்ஸ்டாகிராமில் இவரை வாழ்த்த : mirnaliniravi

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X