பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 16,277 பேருக்கு கொரோனா: 111 பேர் பலி

Updated : மே 25, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) மேலும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 16,277 ஆகவும், பலி எண்ணிக்கை 111 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதில் மஹா.,வில் - 39 பேர், மேற்குவங்கத்தில் - 2 பேர், டில்லி, கேரளா, கர்நாடகா, பிலிப்பைன்ஸ், துபாய், லண்டனில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,003 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 13,916 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,358 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-மே-202018:32:40 IST Report Abuse
Tamilnesan மருத்துவ துறையில் உள்ள நண்பர் ஒருவர் சொன்னது. தமிழ்நாட்டு பொறுத்தவரை கொரநா பாதித்தவர்கள் தொண்ணுறு சதவிகிதம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஓட்டுக்காக அரசு அவர்கள் பெயரை வெளியிட தயங்குகிறது. இறந்தவர்கள் பெயரை கூட வெளியிடவில்லை. அமெரிக்காவில் நியூ யார்க் டைம்ஸ் நேற்று இறந்தவர்கள் பெயரை வெளியிட்டு விட்டது. ஏனெனில், அங்கு வோட்டு வங்கி அரசியல் நடப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X