பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா உறுதி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கேரளா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,  பாதிப்பு, kerala, corona, coronavirus, covid-19, corona outbreak, corona updates, new corona cases, positive cases, corona patients, corona spread, corona news, corona in kerala, india, india fights orona, corona spread

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, மாநிலத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச தொற்று ஆகும்.

ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் தலா 4 பேருக்கும், மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், திருவனந்தபுரம், கண்ணூரில் தலா 12 பேருக்கும், கோழிக்கோட்டில் ஒருவருக்கும், கொல்லத்தில் 3 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது. அதில் 18 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். ஒமனில் இருந்து 3 பேரும், ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து 11 பேருக்கும், சவுதியில் 3 பேருக்கும், குவைத்தில் இருந்து ஒருவரும் வந்துள்ளார்.

29 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தனர். 19 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும் , 5 பேர் குஜராத்தில் இருந்தும், 3 பேர் தமிழகத்தில் இருந்தும், ம.பி., மற்றும் டில்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வந்துள்ளனர். மற்ற 5 பேர் தொடர்பு மூலம் பரவியது.இதனையடுத்து மாநிலத்தில் கொரோனாவினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை பல மாவட்டங்களில் 95,394 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 94,662 வீட்டு கண்காணிப்பிலும் 732 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 53,875 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52,355 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.


latest tamil news



மும்பையில் இருந்து திருச்சூருக்கு வந்த 73 வயதான பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
24-மே-202020:19:34 IST Report Abuse
 Muruga Vel காற்று கொஞ்சமும் புகமுடியாமல் மருத்துவ குழுவினர் இந்த மாதிரி ஆடையை அணிந்து மனித குலத்துக்கு சேவை செய்கிறார்கள் ..பணி நேரங்களில் டாய்லெட் செல்வது கூட கடினமான காரியம் ...மனஉளைச்சலில் பணி புரியும் இவர்கள் மனித உருவில் தெய்வங்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X