மத்திய அரசின் ஊரடங்கு ; மஹா.,முதல்வர் உத்தவ் கருத்து

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

மும்பை : கொரோனா வைரசின் பரவலை தடுக்க ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது தவறானது. அதை முழுமையாக நீட்டிக்க முடியாது என மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் நோய் பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் மஹா., முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் நோய் பாதிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்தது. மஹா.,வில்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,190 ஆக அதிகரித்தது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு பொது சேவைகளை துவங்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மத்திய அரசு படிப்படியாக ரயில்களை இயக்கவும், நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகளை துவங்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அரசின் இந்த அறிவிப்புகள் மஹாராஷ்டிர அரசுக்கு விருப்பமானதல்ல. இதனால் அரசு அதிருப்தியுடன் இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநிலத்தின் உள்துறை செயலர் விலாஸ் தேஷ்முக் கூறுகையில், நோய் பாதிப்பு அதிகரிக்கும் சிவப்பு மண்டலங்களில், கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். உள்நாட்டு விமான சேவையை சிவப்புமண்டலத்தில் தொடங்க அரசு எடுத்த முடிவு மோசமான ஆலோசனை. இவ்வாறு கூறினார்.


latest tamil newsதொடர்ந்து, மஹா.,முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கூறுகையில், கொரோனா வைரசின் பாதிப்பு நமது மாநிலத்தில் அதிகமாக உள்ளது. நாட்டில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த அரசு திடீரென ஊரடங்கை அமல்படுத்தியது மிகவும் தவறானது. ஆயினும் தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தற்போது இதனை முழுமையாக நீக்கினாலும் அதும் அதற்குஇணையான தவறுதான். அவ்வாறு செய்ய முடியாது. அவ்வாறு உடனடியாக மொத்தமாக ஊரடங்கை நீக்கினால் மக்களுக்கு இரட்டிப்பு மோசமான அனுபவங்களைக் கொடுத்தது போன்று இருக்கும். அடுத்து பருவமழை வேறு வருவதால், ஊரடங்கை நீக்குவதில் இன்னும் கூடுதல் கவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இந்த விவகாரங்களில் எந்தவித அரசியல் சாயம் இல்லாமல் மத்திய அரசு உதவி செய்திருக்கிறது. இதுவரை மஹா., அரசு எவ்வித ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் மத்திய அரசிடம் இருந்து பெறவில்லை. வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் அரசு ஷ்ராமிக் ரயில்களை இயக்குகிறது. அதன்மூலம்பாதுகாப்பாக செல்கின்றனர். ஆனால் இந்த ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் உரிய பங்கை மத்திய அரசு இன்னும் எங்களிடம் இருந்து பெறவில்லை. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களில் சிறிய அளவில் பற்றாகுறை நிலவுகிறது. முன் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கவச உடைகள் போன்ற சிலவற்றிலும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
25-மே-202014:03:38 IST Report Abuse
தமிழ்வேள் இப்போ ஊரடங்கு தொடரணுமா ? கூடாதா ? என்ன சொல்ல வருகிறார் இவர் ? தெளிவாக இல்லை ....பால் தாக்கரேக்கு மகனாக இருக்க லாயக்கற்றவர் ..சுடலையை போல தான் இவரும் போல
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202004:05:13 IST Report Abuse
J.V. Iyer thalaiyil ondrum illatha thalaimai ulla காங்கிரஸுடன் சேர்ந்து பேசுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202004:03:12 IST Report Abuse
J.V. Iyer தலைமை காங்கிரஸுடன் சேர்ந்து பேசுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X