பொது செய்தி

இந்தியா

கோவாவில் 54 பேருக்கு கொரோனா

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement

பனாஜி: கோவா மாநிலத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.



latest tamil news



கோவாவில் சமீப காலத்தில் கொரோனா தொற்று ஒன்று கூட இல்லாமல் இருந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே 24ல் ரயில் மூலமாக கோவா வந்தடைந்த பயணிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் டில்லி, மஹாராஷ்டிராவிலிருந்து வந்துள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து கோவா வருபவர்களிடம் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.


latest tamil news



தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் தெற்கு கோவாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 170ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா துறை முடங்கியிருப்பதால் மாநிலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X