பொது செய்தி

இந்தியா

வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ தெலுங்கானா அரசு நடவடிக்கை

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத் : கொரோனா ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தெலுங்கானா அரசு சிறப்பு ரயில்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவிலும் நோய் பரவுதலை கட்டுப்படுத்தவும், கொரோனா தாக்கம் காரணமாக சிக்கி தவிக்கும் மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு பலகட்ட நடவடிக்கையை முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மேற்கொள்கிறது. இந்நிலையில் ஊரடங்கால் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த (வெளி மாநில) தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 41 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மற்ற மாநிலங்களில் இருந்தும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது.

சிறப்பு ரயில்கள் மூலம் தெலுங்கானாவில் நேற்று 46 ரயில்களை இயக்குவதன் மூலம் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வரை தங்களது வீடுகளை அடைய உதவுவதற்கு சிறப்பான நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. மாநிலத்தில் நாம்பள்ளி, கட்கேசர், லிங்கம்பள்ளி, செகந்திராபாத், கச்சேகுடா மற்றும் காசிப்பேட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு வெளி மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, நாம்பள்ளி ரயில்நிலையத்தில் இருந்து ஆறு சில சிறப்பு ரயில்களை தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


latest tamil news



அவர் கூறுகையில், மேலும் 40 ரயில்கள் மாநிலத்தின் பிற ரயில் நிலையங்களிலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு புறப்படுகின்றன. "நள்ளிரவுக்குள் அனைத்து ரயில்களும் புறப்பட்டு, சுமார் 50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்,". இன்றுவரை, மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 88 ரயில்கள் மூலம் 1.22 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை அடைந்துள்ளனர்.


latest tamil news



புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக மாநில அரசாங்கத்தில் பதிவுசெய்தவர்கள். பாதிப்புகள் குறைந்ததும் மீண்டும் நகரத்திற்கு திரும்ப விரும்புகின்றனர். ஒவ்வொரு புலம் பெயர்ந்த தொழிலாளருக்கும் ரயில்களில் ஏறுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப் படுகிறது. அவர்களுக்கு இரண்டு உணவு பாக்கெட்டுகள் மற்றும் மூன்று லிட்டர் குடிநீர் மற்றும் பழங்களை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றார். பயணத்தின் போது உணவு ஏற்பாடுகளை ரயில்வே கவனித்து வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மே-202001:24:28 IST Report Abuse
தமிழ்வேல் இது மனிதாபிமானம். பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
24-மே-202021:30:28 IST Report Abuse
Nallavan Nallavan லாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம்: வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா பேட்டி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X