பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் மது விலைகள் 25 சதவீதம் அதிகரிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி்யில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளதாக மாநில கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வருமானவரி இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன.

தமிழகத்திலும் நேரக்கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மது கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே புதுச்சேரியில் மது கடைகள் திறப்பதற்கு அனுமதி தரப்படாமல் இருந்து வந்தது. இதன்காரணமாக தமிழக எல்லையை ஒட்டி உள்ள விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு புதுச்சேரி மாநில மக்கள் மது வாங்க குவிந்தனர்.

புதுச்சேரியிலும் மது கடைகளை திறப்பது குறித்து முடிவு செய்ய கடந்த 18-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் 20-ந் தேதி மது கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

இதனையடுத்து கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்


latest tamil news



தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் (25 ம்தேதி) மதுகடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது பானங்கள் மீது 25 சதவீதம் வரையில் வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்த வரி உயர்வு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202003:53:46 IST Report Abuse
J.V. Iyer மது விலைகளை நூறு சதவிகிதம் அதிகரித்தால் நல்லது. குடித்துக் கொண்டிருப்பவன் வாங்குவதை நிறுத்தமாட்டான். அரசுக்கும் நல்ல வருமானம். சிகரெட் போலவே மதுவின் விலைகளும் உயரத்தில் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-202022:19:12 IST Report Abuse
தமிழ்வேல் விலையை ஏத்திட்டீங்களா...அப்போ, இதுக்கும் எப்போதும் போல கவர்னர் ஆப்பு அடிச்சுடுவாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X