வூகான் ஆய்வகத்தில் இருப்பது வெளவால் வைரஸ்கள் - கொரோனா இல்லை!

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

வூகான்: சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலில் கிளம்பிய வூகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் வவ்வால் கொரோனா வைரஸ்களின் 3 வகைகள் இருப்பதாகவும், ஆனால் அவை எதுவும் கொரோனா வைரசுடன் ஒத்துப்போகவில்லை என வைரலாஜி நிறுவனத்தில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொடிய உயிர்கொல்லி வைரஸான இது முதலில் வெளவால்களில் உருவாகி பின்னர் மற்றொரு பாலூட்டிகள் மூல மனிதர்களுக்கு பரவி இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகம் தான் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வூகான் வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் வாங் யானி, கொரோனா வைரஸ் தொடர்பாக சீன அரசின் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதாக டிரம்ப் மற்றும் சிலர் கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. சார்ஸ் வைரஸ் பரவிய 2004-ம் ஆண்டு முதல், அதன் மூலத்தை கண்டறிய வெளவால்களின் கொரோனா வைரஸை ஆராய்ந்து வருகிறோம்.

தற்போது எங்களிடம் மூன்று வகை வெளவால் வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவை புதிய கொரோனா வைரஸின் மரபணு உடன் அதிகபட்சமாக 79.8% மட்டுமே ஒத்துப்போகிறது. டிசம்பர் 30 தேதி அறியப்படாத மாதிரிகளை பெற்றோம். ஜனவரி 2-ம் தேதி வைரஸின் மரபணு வரிசையை நிர்ணயித்தோம். ஜனவரி 11-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்துக்கு நோய்க்கிருமி பற்றிய தகவல்களை சமர்ப்பித்தோம்.


latest tamil news



அதற்கு முன்பு இந்த வைரஸை சந்தித்ததில்லை, ஆராய்ச்சி செய்ததில்லை அல்லது வைத்திருக்கவில்லை. எங்களிடம் இல்லாதபோது அது எப்படி எங்கள் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கும்? உண்மையில், எல்லோரையும் போலவே, எங்களுக்கும் கூட வைரஸ் இருப்பது தெரியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202009:44:58 IST Report Abuse
Sampath Kumar வௌவால் மட்டும் தானா? இல்லை பன்றி பாம்பு தேளு போன்ற நீங்க தின்னும் எல்லாம் உண்ட? சப்பை மூஞ்சி உன் புத்தியும் சப்பை யாக உள்ளது
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
25-மே-202007:53:55 IST Report Abuse
blocked user இதை முதல் வாரத்திலேயே சொல்லி இருக்கலாமே.. சீனா தனது கபட நாடகத்தை வைத்து உலகை நம்பவைத்து விடலாம் என்று முயற்சிக்கிறது. சார்ஸ் வந்த பொழுதும் இதையே சொன்னார்கள்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-மே-202006:30:59 IST Report Abuse
Sanny இதுவும் வழமை போல சைனாவின் duplicate தயாரிப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X