பொது செய்தி

இந்தியா

சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அதிகரித்து வரும் 'கொரோனா'

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
CRPF, coronavirus, covid-19, corona, corona outbreak, corona updates, corona crisis, new corona cases, corona spread, corona patients, positivr cases, Central Reserve Police Force, covid-19 pandemic

புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 9 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1.31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மே 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.பி., இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய கம்பெனிகள் படைப்பிரிவினர், எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்த்ர சீமா படை உள்பட பாராமிலிட்ரி படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில் இன்று(மே 24) ஒரே நாளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பிற்குள்ளான சி.ஆர்.பி.எப். வீரர்களின் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 220 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 2 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202003:45:05 IST Report Abuse
J.V. Iyer எல்லைகளில் மோதலின் போது எதிர்கால கிருமியை பரப்ப வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்வார்கள். கவனம் தேவை.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-மே-202001:21:57 IST Report Abuse
தல புராணம் அரசியல்வியாதியோ, ஆட்சியில் இருக்கும் கூட்டமோ பாதிப்படைஞ்சதா ஒரு செய்தியும் இல்ல.. நல்ல தரமான சாப்பாடு போட்டிருந்தால் இவர்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-மே-202021:39:43 IST Report Abuse
தல புராணம் சாப்பாடு நல்லா இருந்தா தானே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். வெறும் சுக்கா ரொட்டி, தட்கா தால், பியாஜ் கொடுத்து இவனுங்க ராமர் கோவிலும், படேல் சிலையும், ரபேல் விமானத்துக்கு 40,000 கோடி பராமரிப்பு காண்டிராக்டுன்னு கொள்ளையும் அடிச்சா இப்படி தான் பாவம் இவர்கள் தலையில் விடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X