இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 119 பேர் பலி

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ரோம் : கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 119 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடி கொரோனா ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது. இத்தாலியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 119 பேர்பலியாகினர். இத்தாலியில் முன்பை விட தினசரி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,735 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,29,327 ஆக அதிகரித்தது.


latest tamil news



இத்தாலியில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,840 ஆக உள்ளது. இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், 2,120 பேராக மேலும் அதிகரித்தனர். நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,752 ஆக உள்ளது. நாட்டில் 572 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 23 பேர் குறைந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் 8,695 பேர் பரிசோதிக்கப்பட்டு தொற்று நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
24-மே-202022:45:52 IST Report Abuse
Mannai Radha Krishnan இத்தாலி கிருத்துவர்களின் தலைமை மடம் உள்ள இடம். இந்திய கிருத்துவர்கள் குணமாகாத வியாதிகளை மந்திருத்து குணம் அடைய செய்வதாக பீத்திக்கிறார்களே, இத்தாலி போய் போப்புக்கு உதவியாக இருந்து எல்லோரையும் குணப் படுத்த வேண்டியதுதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X