சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கட்டம் கட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் இடம்!

Added : மே 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கட்டம் கட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் இடம்!

கட்டம் கட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் இடம்!

''சாலை விபத்துல இறந்த காவலர் குடும்பத்துக்கு, 'வாட்ஸ் ஆப்' குழு வழியா, நிதி திரட்டி உதவியிருக்காங்க பா...'' என்ற
படியே, திண்ணையில் அமர்ந்தார் அன்வர்பாய்.''நல்ல விஷயமாக இருக்கு... விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த, 3ம் தேதி ராத்திரி, ராம்கிங்கிற போலீஸ்காரர், பணி முடிந்து, சென்னையில இருந்து பைக்குல,
செங்கல்பட்டுக்கு போயிருக்காரு... அப்போ, வாகனம் மோதி இறந்துட்டாரு பா...''அவரது குடும்பத்துக்கு உதவணுமுன்னு, ராம்கியோட நண்பர்களான காவலர்கள் சக்திவேல், வினோத் ஆகியோர், 'வாட்ஸ் ஆப்' குழுவுல, பதிவு போட்டிருந்தாங்க... 2013ல், ராம்கியோட, போலீஸ் பயிற்சி மேற்கொண்ட போலீஸ்காரங்க எல்லாரும், அவங்களால முடிஞ்ச, பண உதவி பண்ணிருக்காங்க பா...
''வசூலான, 7.14
லட்சம் ரூபாய் பணத்தை, ராம்கி குடும்பத்துக்கு கொடுத்துருக்காங்க... இதை, போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டி இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''கட்டம் கட்டினவாளை எல்லாம்,
மீண்டும் கட்சியில சேர்க்க ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''எந்த கட்சியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தி.மு.க.,வுல தான்... லோக்சபா மற்றும்
உள்ளாட்சித் தேர்தல்கள்ல, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து, சொந்த கட்சியினருக்கு துரோகம் செஞ்சவாளை எல்லாம், கட்சி
மேலிடம், 'கட்டம்' கட்டியிருந்துது ஓய்...
''கட்டம் கட்டப்பட்டவா எல்லாம், இளைஞரணி செயலர் உதயநிதியை சந்திச்சு, 'நாங்க, என்னைக்கும் உங்க ஆதரவாளரா இருப்போம்'ன்னு சொல்லிட்டா, கட்சியில இடம் உண்டு...
''மூத்த மாவட்டச் செயலர்களுக்கே தெரியாம இப்படி நடக்கறதால, அவா எல்லாரும், 'கட்சியில எங்களுக்கு என்ன மரியாதை இருக்கு'ன்னு சொல்லி, வேதனைப்படறா ஓய்...'' என, விளக்கினார் குப்பண்ணா.
''சிங்கப்பூருல தவிச்ச இளைஞர், சென்னைக்கு திரும்பி வர, கவர்னர் உதவியிருக்கார் வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்னன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையைச் சேர்ந்த, யுவராஜ் ராதாகிருஷ்ணன்ங்கறவர், வேலை விஷயமாக, மலேஷியா போயிருக்கார்... அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால, மார்ச், 20ம் தேதி, மலேஷியாலேர்ந்து, சிங்கப்பூர் வழியா, சென்னைக்கு வர, விமானத்தில்
புறப்பட்டுருக்காரு வே...''கொரோனா காரணமா, சிங்கப்பூருல விமான சேவை நிறுத்திட்டதால, அங்கே
மாட்டிக்கிட்டார்...
''சென்னைக்கு எப்படி போறதுன்னு தெரியாம தவிச்சப்போ, சிங்கப்பூர்ல இருந்து, தெலுங்கானாவுக்கு, விமானம் புறப்பட போறது தெரிஞ்சது... அதுல, தெலுங்கானாவைச் சேர்ந்தவங்க மட்டும் தான் அனுமதிச்சிருக்காவ வே...
''உடனே அவரு, தமிழக பா.ஜ., நிர்வாகி ரவிச்சந்திரன் வழியா, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் கவனத்திற்கு, விஷயத்தை கொண்டு போயிருக்கார்...
''உடனே தமிழிசை, தெலுங்கானா வர்ற விமானத்துல, அவர் சென்னைக்கு வர உதவி பண்ணிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள்
கிளம்ப, திண்ணை அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-202019:42:15 IST Report Abuse
r.sundaram மூத்த தலைவர் ஒருவர் தாமரைப்பக்கம் போனதால் ரொம்பவும் உதரல்ல இருக்காங்க போலிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X