ஜோதிமணிக்கு பிரச்னை?

Added : மே 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஜோதிமணிக்கு பிரச்னை?பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., - எம்.,பி ஜோதிமணியின் சர்ச்சைக்குரிய பேச்சு,. அரசியல் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எம்.,பி, பிரதமரைப் பற்றி இப்படி பேசலாமா என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம், இப்போது டில்லியிலும் அலசப்படுகிறது. எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தான், பிரதமர் மோடியின்
 ஜோதிமணிக்கு பிரச்னை?

ஜோதிமணிக்கு பிரச்னை?

பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., - எம்.,பி ஜோதிமணியின் சர்ச்சைக்குரிய பேச்சு,. அரசியல் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எம்.,பி, பிரதமரைப் பற்றி இப்படி பேசலாமா என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம், இப்போது டில்லியிலும் அலசப்படுகிறது. எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தான், பிரதமர் மோடியின் பாதுகாப்பை கவனித்து வருகின்றனர். ஜோதிமணியின் சர்ச்சைக்குரிய பேச்சு, இந்த அமைப்பின் சீனியர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜோதிமணி என்ன பேசினார், என்ன சூழ்நிலையில் இப்படி பேசினார், எதற்கு மோடியின் பெயரை இழுத்தார், என்பதைக் கண்டறிய, அதிகாரிகள், அந்தப் பேச்சை திரும்ப, திரும்ப கேட்டனர்.
இந்த பாதுகாப்பு பிரிவு, ஜோதிமணியிடம் விசாரணை நடத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகம் லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த லோக்சபா கூட்டத்தொடரில், பிரதமர் மோடி பேசிய போது, ஜோதிமணி தன் இருக்கையிலிருந்து பிரதமரை நோக்கி ஓடினார். அப்போது, ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிரிதி இரானிதான், ஜோதிமணியைத் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தை வைத்தும், பிரதமரின் பாதுகாப்பு பிரிவு, ஜோதிமணியின் சர்ச்சைப் பேச்சை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக பா.ஜ.,தலைவர்கள், ஜோதிமணியின் சர்ச்சை பேச்சு குறித்து, கட்சி தலைமைக்கு புகார் அளித்துள்ளனர்.

தமிழக பா.ஜ.,வினருக்கு பதவி?

மத்தியில் பா.ஜ., ஆட்சி செய்தாலும், தமிழக பா.ஜ.,வையும், அதன் தலைவர்களையும், டில்லி மேலிடம் கண்டு கொள்வதேயில்லை என்பது, கமலாலயத்தில் சொல்லப்படும் புகார். அனேகமாக, விரைவில், இது சரி செய்யப்படும் என, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக பிரதமர் பதவியேற்று, வரும், 30ம் தேதியோடு, ஓராண்டு ஆகப்போகிறது. இது, கொரோனா பரவலால், பெரிய விழாவாக கொண்டாடப்படாமல், அடக்கி வாசிக்கப்படுகிறது. ஆனால், 30ம் தேதியன்று, கட்சியின் தேசிய தலைவர், ஜே.பி. நட்டா, புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க உள்ளாராம். அகில இந்திய அளவில், பா.ஜ.,விற்கு ஆறு பொதுச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இருப்பார். இதைத் தவிர, பா.ஜ.,வின் துணைத் தலைவர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பொறுப்பிலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்பார் என, டில்லி பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.பா.ஜ.,வின் புதிய தலைவர் நட்டா, தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தமிழக பா.ஜ.,வை உற்சாகப்படுத்த நட்டா திட்டமிட்டுள்ளார்.

பிரியங்காவை கைவிட்ட கட்சியினர்

மீடியாக்களிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் அதிகமாக பேசப்படுவது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைதான். சமீபத்தில், டில்லி எல்லையில் தவித்த, உ.பி.,யைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்ப, 1000 பஸ்களை தருகிறேன் என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா அறிவித்தார். யாரும் எதிர்பாராத வகையில், உடனே இதை ஏற்றுக் கொண்டார், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.ஆனால், இந்த பஸ்களின் ஆவணங்களில் பல போலி எனவும், பல பஸ்கள் செயல்படும் நிலையில் இல்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரியங்கா, உ.பி., அரசை கடுமையாக விமர்சித்துவிட்டு, தன் திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களால், பிரியங்கா கேட்ட 1000 பஸ்களை ஏற்பாடு செய்து தர முடியவில்லை. இதனால், பாதி பஸ்கள், காங் ஆட்சி செய்யும் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டன. பல கட்சிகளும், புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, ஏகப்பட்ட கரிசனம் காட்டி வரும் நிலையில் ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகள், இந்த தொழிலாளர்களின் பிரச்னைகளை, கண்டு கொள்ளவில்லை. இவர்களால் நமக்கு ஓட்டு கிடைக்கப் போவதில்லை; காரணம், இவர்கள், உ.பி., பீஹாரை சேர்ந்தவர்கள்; இவர்களால் பயன் அடையப் போவது அந்த மாநில அரசுகள் தான் என, இந்த இரண்டு மாநில முதல்வர்களும், அவர்களுக்காக பணம் செலவழிக்க மறுத்துவிட்டனராம்.

கேரள காங்.,கில் உள்குத்து

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்க, பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது, பலராலும் பாராட்டப்படுகிறது.இந்நிலையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர், பினராயி விஜயனைப் பாராட்டியுள்ளார். இது, கேரளா காங்கிரசுக்குள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரி அரசுக்கு எதிராக, காங்., நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த சமயத்தில், சசி தரூர், இப்படி பேசலாமா என, தொண்டர்களும், சீனியர் தலைவர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக, டில்லி மேலிடத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்., ஜெயித்த சமயத்தில், முதல்வர் பதவியில் உட்கார வேண்டியவர், அக்கட்சியின் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா. ஆனால், காங்., தலைவர், சோனியா உம்மன் சாண்டியை முதல்வராக்கினார். இப்போது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சென்னிதலா முதல்வராக துடிக்கிறார்.
இந்த சமயத்தில், சசி தரூர் இப்படி செய்யலாமா என கடுப்பாகி, இவரும் மேலிடத்திற்கு புகார் அனுப்பியுள்ளாராம்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-மே-202008:06:00 IST Report Abuse
Sampath Kumar செத்த பாம்பை அடிக்க பாயும் வீராதி வீர்கள் ??? போய் வேற வேலை பாருங்கள்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-மே-202019:24:44 IST Report Abuse
Endrum Indian பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி ???பின்னரே செல்லும் விஜயன் இடரும் ஜனநாயக பின்னணி ஆட்சி நடக்கின்றது என்று மாற்றவேண்டும்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-மே-202006:06:21 IST Report Abuse
Indhuindian Parliament should expel her and the election commission should debar her from holding any elected posts for ever.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X