லடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

லடாக் : இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து தனது வீரர்களை குவித்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.latest tamil newsஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நீண்டு வருகிறது. நாட்டில் சிக்கிம் மற்றும் லடாக் போன்ற எல்லை பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் நிலைகளில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அதிகப்படியான பாதிப்புகள் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சீன அரசின் அலட்சியமே காரணம் என பல தரப்புகளும் குற்றம் சாட்டி வருகிறது. இதை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்களை நடத்துவது, எல்லை பகுதிக்குள் வீரர்கள் நுழைவது, ட்ரோன்கள் மூலம் நமது பகுதிகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் சீனா 100 க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை செய்துள்ளது.


படைகள் குவிப்பு


இந்நிலையில் லடாக் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன வீரர்களை அந்நாட்டு அரசு குவித்து வருகிறது. சீனாவின் இந்த செயல்களால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது. பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது. 100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்து வைத்திருப்பது தெரிகிறது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்நாட்டு அரசு போரை தொடுக்க விரும்புவதாக தெரிகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


latest tamil newsஅதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளையும் 100 க்கும் மேற்பட்ட அளவில் அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் இந்தியா - சீன எல்லைகளில் குறிப்பாக 4 இடங்களை அந்நாட்டு அரசு குறி வைக்கிறது. இதற்கு முன்பு அந்த பகுதிகளில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. லடாக் எல்லையில் சீனா குறி வைத்துள்ளதால் அந்த பகுதியில் ராணுவ தளபதி நரவானே அங்கு சோதனை நடத்தினார். லடாக்கின் லே எல்லையில் சோதனை நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. லடாக் பகுதியில்இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமாலும் பிரச்சனை வெடிக்கலாம் எனதெரிகிறது.


latest tamil news
ஏற்கனவே சிக்கிம் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே கடந்த வாரம் பிரச்னையால் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் நகு லா பகுதியில் சண்டை வந்தது. கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் சீன அரசு போர் விமானங்களை அனுப்பியதும் அத்துமீறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
25-மே-202008:54:49 IST Report Abuse
aryajaffna இந்தியாவில் சீன சாயலில் ஒரிஜினல் சீன இன மக்கள் பல பிராந்தியங்களில் உள்ளார்கள், அவர்கள் இன ரீதியாக , சமய , கலாசார ரீதியாக பல சொல்லான துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள் , எந்த அரச உதவியும் கிடைப்பதில்லை , சீன ராணுவம் ஊடுருவி அந்த மக்களை மீட்டு சீன மக்கள் போல் சகல வசதிகளுடனும் ( மலசல கூடம் , வீடு, பள்ளி கூடம் ) வாழ வைக்க வேண்டும்.
Rate this:
Thirumal Kumaresan - singapore,இந்தியா
25-மே-202009:52:05 IST Report Abuse
Thirumal Kumaresankorikkai vaikka veandiyathu india arasudan.nee yaaruda aduttha naaddukku vaalaaddukiraai,...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-மே-202008:06:44 IST Report Abuse
VENKATASUBRAMANIAN China is trying to divert India from economic development. Because lot of industries are shifting from China and choose India is first option. To prevent this china is doing all. We must give big response to China so that they will not touch us in future.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
25-மே-202007:50:54 IST Report Abuse
konanki சீனா இந்தியாவின் முதல் எதிரி. இதை புரிந்து கொண்டு இந்திய அரசியல்/ராஜாங்க/ராணுவ தலைமை எதிர் கொள்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X