அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்

Updated : மே 26, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (88)
Share
Advertisement
dmk, politics, chennai news, tamil nadu news, tn news, dmk chief, aiadmk

சென்னை :'அ.தி.மு.க., அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்' என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது.கட்சியின் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட போது, அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைக்க, நீதிமன்றத்தில் வாதாடிய, கட்சியின் சட்டத்துறையினருக்கும் வாழ்த்து கூறப்பட்டது.


பின், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



* முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் மீது, கொரோனா ஊழல் புகார் அளித்த, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது; கரூர் கலெக்டரை புகார் கொடுக்க வைத்து, அந்த மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி மீது, வழக்குப் பதிவு செய்தது.

* கோவை மாநகர் மாவட்ட செயலர் கார்த்திக், விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தி கைது; முதல்வரின் ஊழலை பதிவிட்டதற்காக, தி.மு.க., - ஐ.டி.,
அணியின், ஐந்து நிர்வாகிகள் கைது போன்றவை, அரசின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள். இதற்கு, கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* அ.தி.மு.க., அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
31-மே-202008:15:34 IST Report Abuse
Srinivasan Rangarajan ஊழல் பட்டியல்ன்னு சொல்லறத்துக்கு பதிலாக ஸ்டாலின் பட்டியல் இனம்ன்னு வாய் தவறி பேசி மாட்டிக்காம இருக்கணும். ஏற்கனவே ஜனங்க காண்டுல இருக்காங்க .......
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
30-மே-202014:48:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஆமாம் இந்த பட்டியல் வெளியிடுற உடன்பிறப்பு எல்லாருக்கும் அடுத்த நாள் உழைச்சுதான் சாப்பிடுவாங்க .உலக மகா கொள்ளை கூட்டம் நீங்க உங்களுக்கு ஒரு செருப்பு தூசி அளவு கூட மரியாதை கிடையாது மக்களிடம் .உங்க நாடகத்தை டீவீ சீரியலில் போட்டால் பல ஆண்டு ஓடும் அய்யா
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
26-மே-202020:10:03 IST Report Abuse
K.n. Dhasarathan மூளை மூளைக்கு கிளம்பட்டும் தி மு க வழக்கறிஞர்கள் அணி, பொய் வழக்கு போடுபவர்கள் மீது நிதானமாக அதே நேரம் ஆதாரத்துடன் வழக்குகள் பதிவு பண்ணட்டும், அப்போதாவது நீதி மன்றம் இடித்துரைத்து பொய் வழக்கு புனைவோரை தண்டிக்கட்டும், காவல் துறை சட்டப்படி கடமையை செய்ய வேண்டும், அத்து மீறினால் நீதிமன்றத்திடம் கூட்டு பட வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X