பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை: தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



மே.25 முதல்(நாளை) உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.


latest tamil news




அதன் விபரம்


பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம். இ-பாஸில் 8 விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கும்.
விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும். 14நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சொந்த வீடு இல்லாதவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையத்தில் சேர வேண்டும்.
திருச்சியில் இருந்து நாளை விமானங்கள் இயக்கப்படும். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை
விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்க வேண்டும்.
பயணிகள் செல்லும் காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். தேவையான பயணிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.
தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-மே-202019:04:11 IST Report Abuse
SENTHIL NATHAN வெந்துஜா புண்ணில் வேல் பாய்ச்சுவது என்றால் தற்போதைய அரசின் நடவடிக்கைகளை சொல்லலாம். விமான பயணம் செய்து ஒருவர் வருகிறார் அவரை தனிமை படுத்த வேண்டும் . விமானம் ஏறும் முன் சோதனை, விமானத்தில் இருந்து இறங்கிய பின் சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் பலர் இரண்டு நாள் பயணமாக வருவார்கள். அவர்களை எப்படி தனிமை படுத்த போகிறீர்கள் ?? அனைவரும் கொரோனாவை அதன் போக்கில் விட்டு விட்டு தங்களது வேலைகளை சாதாரணமாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுபது நாட்களுக்கு மேல் லாக் டவுன் செய்தும் கொரநா பரவுகிறது என்றால் கட்டுப்படுத்தும் முறைகளில் எதோ தவறு என்று உணர வேண்டும்.
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
25-மே-202010:23:41 IST Report Abuse
 Shake-sphere உள்நாட்டு பயணத்திற்கே இ- பாஸ் பெறவேண்டும் என்பது உள்நாட்டில் ஒரு மாநிலம் விட்டு மற்ற மாநிலம் செல்வதற்கு விசா வாங்குவது போலாகும் இது அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதை போன்றதாகும் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு இந்திய பிரஜை இந்த நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கும் பிரயாணம் செய்ய உரிமை உண்டு இப்போதுள்ள நோயின் கால கட்டத்திற்குள் பிரயாணம் செய்ய நேர்ந்தால் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அதன் அடிப்படையில் தடையின்றி பிரயாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் தற்போது கூறப்படுவதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக பாஸ் வாங்க சொல்வது உயர் பதவியில் உள்ளவர்கள் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக உள்ளார்கள் என்பதனையே காட்டுகிறது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-மே-202011:54:58 IST Report Abuse
Visu Iyerஇப்போ தான் நீங்க சொல்றீங்க.. அவர்கள் அப்படி என்று.....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
25-மே-202011:55:34 IST Report Abuse
Visu Iyerமாநிலத்திற்கு என்ற இந்த கட்டுப்பாடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என விதிக்கப்பட்டு உள்ளதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X