பாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது| Dinamalar

பாக்.,கில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020 | கருத்துகள் (3)
Share

இஸ்லாமாபாத் : கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் பலியாகினர் எனவும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,601 ஆக உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து 50 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32 பேர் நோய் தொற்றால் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,133 ஆக அதிகரித்தது. இதனால் பாக்.,கில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,601 ஆக அதிகரித்தது.


latest tamil news



நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிந்துவில் 21,645 பேர் , பஞ்சாப்பில் 19,557 பேர் , கைபர் பக்துவாவில் 7,685 பேர் மற்றும் பலுசிஸ்தானில் 3,306 பேர் , இஸ்லாமாபாத்தில் 1,592 பேர் , கில்கித்-பல்திஸ்தானில் 619 பேர் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 197 பேர் பாதிக்கப் பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் 17,198 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மேலும் 473,607 பேர் பரிசோதிக்கப்பட்டனர். மேலும் சமூக இடைவெளியுடன், முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X