பிரேசிலில் உச்சகட்ட கொரோனா பாதிப்பு

Updated : மே 24, 2020 | Added : மே 24, 2020
Share
Advertisement

பிரேசிலியா : பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 3,047 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகமாக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்திலும், பிரேசில் அடுத்த இடத்திலும் இருந்தது.


latest tamil news



ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரே நாளில் பிரேசிலில் 3,047 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,937 ஆக அதிகரித்தது. இதனால் அதிக பாதிப்புகளுடன் பிரேசில், ரஷ்யாவை முந்தி சென்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X