ஹாங்காங்கில் மீண்டும் துவங்கியது போராட்டம்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஹாங்காங், சீன அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள, தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் வெடித்தன. அதையடுத்து, போராட்டத்தை கலைக்க,போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; மிளகுத் தூளை தூவினர்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், சீன அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து, கடந்தாண்டு மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன.பல மாதங்களுக்கு
hong kong, china, hong kong protest, coronavirus


ஹாங்காங், சீன அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள, தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் வெடித்தன. அதையடுத்து, போராட்டத்தை கலைக்க,போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; மிளகுத் தூளை தூவினர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், சீன அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து, கடந்தாண்டு மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன.பல மாதங்களுக்கு போராட்டம் தொடர்ந்ததால், ஹாங்காங் ஸ்தம்பித்தது. கொரோனா மற்றும் ஊரடங்கால், போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.இந்த நிலையில், ஹாங்காங்கில், மிகவும் கடுமையான, தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தப் போவதாக சீனா


latest tamil newsகூறியுள்ளது.சீனாவுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபடுவோரை குறி வைத்து, இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.இதற்கு, ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சீனாவின் முயற்சிக்கு, ஹாங்காங்கின் தலைமை செயலர் கேரி லேம்ஆதரவு தெரிவித்துள்ளார்.இது, மக்களை மேலும் கோபமடையசெய்துள்ளது.ஹாங்காங்கை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சீனாவின் முயற்சியை எதிர்த்து, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், போராட்டத்தைக் கலைக்க, ஹாங்காங் போலீசார், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகு தூளை தூவினர்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
25-மே-202015:36:10 IST Report Abuse
Krishna Revoke Hongong's Handover to Communist China. Instead Handover it to Nationalist China-Taiwan. Simultaneously. Liberate Tibet & Xinkiang Swallowed by Communists (66% China Lost). Impose All Sanctions-Compensations on Communist China for Spreading Corona Pandemic & Deaths
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
25-மே-202012:14:00 IST Report Abuse
Anbuselvan பாவம் ஹாங்காங் காரங்க. இந்த சீன சப்ப மூக்கு காரங்க இன்னுமே கொஞ்சம் தீவிரமான மீளவே முடியாத கொரானா வைரஸ் ஐ ஹாங்காங் லே ....
Rate this:
Cancel
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
25-மே-202011:02:58 IST Report Abuse
Ku Su செத்து போன கமியூனிசத்துக்கு இன்னும் எத்தனை நாள் தான் காத்தடிச்சு முட்டு குடுப்பாங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X