பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய வேலைக்கு ஆள் தேடி விளம்பரம்

Added : மே 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை : 'கோவையில் உள்ள விவசாய தோட்டங்களில், குடும்பத்துடன் தங்கி, விவசாயப் பணி மேற்கொள்ள, மாத சம்பளத்தில் ஆட்கள் தேவை' என, விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், தென்னை, வாழை, பாக்கு, எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், தோட்டக்கலை பயிர்கள், கீரை மற்றும் நெல் ஆகியவை, அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியே, பெரும்பாலான விவசாய நிலங்கள் உள்ளதால், தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. கோடையில் மட்டும் சில மாதங்களுக்கு வறட்சி இருந்தாலும், பருவ மழை காலத்தில் தண்ணீர் செழிக்கும். ஊரடங்கு காரணமாக, விவசாயக் கூலிகளாக இருந்த, வட மாநிலத்தவர் மற்றும் பிற மாவட்ட தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு சென்று விட்டதால், தற்போது, கோவையில் விவசாயப் பணிகள் தொய்வடைந்துள்ளன.

எனவே, 'கோவையில் உள்ள தோட்டங்களில், குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாயப் பணி மேற்கொள்ள, ஆண் மற்றும் பெண்கள், குடும்பத்தோடு தேவை' என, கோவை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து, விவசாயிகளுக்கான, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்களில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'மாதச் சம்பளம் வழங்கப்படும். விவசாயக் கூலி வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்' என, மொபைல் போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
25-மே-202005:06:44 IST Report Abuse
Dr.T.Senthilsigamani நல்ல செய்தி .வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பங்கள் இந்த விவசாய பணியில் சேர்ந்து ,தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தலாம்.இந்த விவசாய கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு இந்த விவசாய வருமானம் உதவட்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகளும் இத்தகைய விவசாய சங்கங்களுக்கு ,வட்டியில்லா கடன் ,உரம் வாங்க மானியம் என உதவ வேண்டும் .விவசாயம் செழித்தல் பூமி செழித்திட மிகவும் அவசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X