10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
நாகர்கோவில்: கேரளாவில், 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லம் மாவட்டம், அஞ்சல் பகுதியை சேர்ந்தவர், உத்ரா, 23. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் கம்பெனி கிளார்க், சூரஜ், 26 என்பவரை திருமணம் செய்தார். 1 வயதில் மகன்

நாகர்கோவில்: கேரளாவில், 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லம் மாவட்டம், அஞ்சல் பகுதியை சேர்ந்தவர், உத்ரா, 23. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனியார் கம்பெனி கிளார்க், சூரஜ், 26 என்பவரை திருமணம் செய்தார். 1 வயதில் மகன் உள்ளான். பிப்., இறுதியில் பறக்கோடு பகுதியில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கியபோது, உத்ராவை பாம்பு கடித்தது. சிகிச்சைக்கு பின் அஞ்சலில் உள்ள தாய் வீட்டில், உத்ரா ஓய்வெடுத்தார்.

மே, 6ல் வீட்டு மாடி, 'ஏசி' அறையில், பாம்பு கடித்து உத்ரா பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர், அஞ்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், உத்ராவை, அவர் கணவர் சூரஜ் கொலை செய்தது உறுதியானது. அவர் கைது செய்யப்பட்டார்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:சூரஜின் அலைபேசியை சோதித்தோம். உத்ராவை இரண்டாவதாக பாம்பு கடித்த, மே, 6ம் தேதிக்கு முந்தைய நாள் வரை, ஆறு மாதங்களாக, அடூரை சார்ந்த பாம்பாட்டி, சுரேஷிடம் போனில் பேசியது தெரியவந்தது.

சுரேஷிடம் விசாரித்தோம். மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில், கருமூர்க்கன் விஷப்பாம்பை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, சூரஜ் வாங்கியது தெரியவந்தது. இந்த பாம்பை வைத்து, இரண்டு முறை உத்ராவை கடிக்க வைத்து ரசித்துள்ளார்.


latest tamil newsஇரண்டாவதாக உத்ராவை பாம்பு கடித்த போது, பாம்பை பெட்டிக்குள் அடைக்க முடியாததால், அதிகாலையில் வீட்டை விட்டு சூரஜ் வெளியேறினார். பாம்பாட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சூரஜின் உறவினர்கள் இருவரிடம் விசாரிக்கப்படுகிறது. உத்ரா கொலைக்கு, வரதட்சணை பிரச்னை மட்டும் காரணமா, வேறு காரணம் உள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
25-மே-202015:29:23 IST Report Abuse
Krishna Quick & Maxm Punishment (incl. Death) to Real Accused (Instead of Scape-Goats Etc propped-up to Cover-Up natural Failures of Police Investigations) through Fast-Track But Neutral-UNBIASED Police & Courts (possible within 06months) Must be Done,
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
25-மே-202015:09:58 IST Report Abuse
vnatarajan இப்படிப்பட்ட கயவனுக்கெல்லாம் குற்றம் உறுதி செய்யப்பட்டால் நீதிமன்றம் ஒரே தீர்ப்புதான் கொடுக்கவேண்டும். அதாவது இதே போன்ற கருமூர்க்கன் விஷ பாம்பைக்கொண்டு அவனையும் பாம்பாட்டியையும் கடிக்கவைத்து சாகடிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கவேண்டும். இதற்கிடையில் இவர்களுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்கக்கூடாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-மே-202014:04:07 IST Report Abuse
Lion Drsekar செய்திகளை படிக்கும்போது நமக்கு கோவம் அதிக அளவில் வரும் ஆனால் எல்லா நிலைகளிலும் எந்த வேகமும் இருக்காது, அவரும் வெளியே வருவார், இவரை பொது மக்கள் தாக்காமல் இருக்க பாதுகாப்பு மிக அதிக அளவில் இருக்கும், நான் மூன்றாவது தலைமுறையைக் காண்கிறேன், அன்று எப்படி இருந்ததோ அதே நிலைதான் இன்றும், இன்று இது போன்றவர்களுக்கு வசதிகள் அதிகமாக இருக்கிறது, பாம்பு கடிக்கும்போது அந்த பெண் எப்படி கதறி இருப்பார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான செயல்தான், யார் என்ன செய்ய முடியும், வந்தே மாதரம்
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
26-மே-202005:00:47 IST Report Abuse
skanda kumartasmac tamilnadu vaazhga. No use in crying, howling, shouting, lamenting....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X