'தொழிலாளர்களை திரும்ப அழைக்க எங்கள் அனுமதியை பெற வேண்டும்'

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி: ''உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசு, எங்களிடம் அனுமதி பெற வேண்டும்,'' என, அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்



latest tamil news



.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான, 'பாஞ்சஜன்யா' பத்திரிகைக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாட்டின் முதுகெலும்பை போன்றவர்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கு காலத்தில் சரியாக நடத்தவில்லை. அவர்கள், எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, மாநிலத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்காக, கமிஷன் ஒன்றை, மாநில அரசு அமைக்க உள்ளது. உ.பி.,யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.


latest tamil news



புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பது, மாநில அரசின் கடமை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் பற்றி கமிஷன் தெரிவிக்கும். இதுவரை, 23 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்.இவர்களில், மும்பையிலிருந்து திரும்பிய, 75 சதவீதம் பேரும், டில்லியிலிருந்து திரும்பிய, 50 சதவீதம் பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரதமர், மோடி எடுத்து சரியான நடவடிக்கையால் தான், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - chennai,இந்தியா
25-மே-202019:54:19 IST Report Abuse
Barathan சரி இவரிடம் அனுமதி கேட்டே தொழிலாளர்களை கொண்டு வந்தாலும் என்ன பயன்? இதனால் நடக்க போவது என்ன? இது போன்ற முடிவினால் உத்திர பிரதேசத்து மக்களுக்கு தான் பின்னடைவு. அவர்களே கிளம்பி வந்த இவர் என்ன பண்ணுவார்? தடுக்கவே முடியும். இது என்ன துபாய் கு ஆள் அனுப்புவது போலவா? பவர் இருந்த எது வேண்டுமானாலும் பண்ண கூடாது... வேண்டும் என்றால் நல்லதொரு கணக்கு வைத்து கொள்ளலாம். யார் எங்கே போகிறார்கள் என்று. மற்ற மாநில அரசுகள் இவர்களிடம் போய் ஆள் அனுப்புனு பிச்சை எல்லாம் எடுக்க மாட்டார்கள். இந்த மடம் இல்லேன்னா வேற மடம். உ பி இல்லேன்னா பீகார் பெங்கால் வடகிழக்கு மாநிலங்கள் ...இந்த ஆளு யோசிச்ச போல தெரியல... பாவம் உ பி மக்கள்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
25-மே-202015:14:30 IST Report Abuse
ponssasi காங்கிரஸ் ஏற்பாடு செய்து தொழிலாளர்களை அனுப்பிய ஆயிரம் பேருந்துகளை பெர்மிட் இல்ல, RC. புக் இல்ல, இன்சூரன்ஸ் இல்லனு சென்னை ட்ராபிக் போலீஸ் போல கேட்டு குடிக்க குடிநீர் கூட கொடுக்காம உங்க எல்லையில நிற்கவைத்தேயே அந்த தொழிலாளர்களை பற்றியா பேசுறீங்க மவராசா,
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
25-மே-202015:02:52 IST Report Abuse
Krishna SHAMELESS ACTORS
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X