பொது செய்தி

தமிழ்நாடு

மணப்பெண்ணுக்கு கொரோனா; தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்டார்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
marriage, coronavirus, covid 19, lockdown, coronavirus lockdown, chennai news, coronavirus tamil nadu, tamil nadu news, மணப்பெண், கொரோனா

சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி 74 கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 26 வயது பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த 27 வயது உறவினர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இருவருக்கும் நேற்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 21ல் 'இ - பாஸ்' மூலம் சென்னையிலிருந்து பெண் வந்தார். தலைவாசல் நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என பெண்ணை அறிவுறுத்தினர்.


சேலம், கெங்கவல்லியை சேர்ந்த இளம்பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்காக 21ம் தேதி சேலத்திற்கு வந்தார். நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த பெண்ணுக்கு வீட்டிலேலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. ஒரு சிலரே திருமணத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று, மணப்பெண்ணை தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மணமகன் அவரது வீட்டிற்கு திரும்பி சென்றார். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

latest tamil news



ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று காலை முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் எளிமையான முறையில் அவருக்கு திருமணம் நடந்தது. சில மணி நேரத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை சுகாதார அதிகாரிகள் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தினர். திருமணத்தில் பங்கேற்றவர்களையும் தனிமைப்படுத்தி அவரவர் வீடுகளில் 'நோட்டீஸ்' ஒட்டினர். திருமணம் நடந்த வீடு தெரு கிராம பகுதியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுகாதாரத் துறையினர் கூறுகையில் 'புதுமண தம்பதி திருமணத்தில் பங்கேற்ற குடும்பத்தினர் உறவினர் உட்பட 12 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - chennai,இந்தியா
25-மே-202011:49:26 IST Report Abuse
sivakumar ஏன் ஒரு மாசம் கழிச்சு மனசு மாறி போயிடுமோன்ட்டு பயமா...?
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-மே-202009:50:08 IST Report Abuse
A.George Alphonse பாவம் வாழ்க்கை ஆரம்பமே சோதனையில்.அந்த திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் தனிமை என்ற பேரில் ஆப்பு.வாழ்க்கையே.வெறுப்பாகி விட்டது. ண்டவர்களுக்கும்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-மே-202008:29:52 IST Report Abuse
 Muruga Vel திருமணத்தை தள்ளி போட்டிருக்கலாம் … கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டவில்லை என்பது மாதிரி ஆகி விட்டதே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X