பொது செய்தி

இந்தியா

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

Added : மே 25, 2020
Share
Advertisement
driving licence, coronavirus lockdown, coronavirus outbreak,
டிரவைிங் லைசென்ஸ்,புதுப்பிப்பு,ஜூலை 31 வரை,அவகாசம், நீட்டிப்பு

புதுடில்லி: டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்டவை வரும் ஜூலை 31 வரையில்அவகாசத்தை நீட்டித்து என அரசு அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் அச்சுற்றுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு தழுவிய முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31 ம் தேதி வரையில் ஒரு சில தளர்வுகளுடன் 4 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.


latest tamil news


ஊரடங்கு கால கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் செயல்படவில்லை .மேலும் பொது போக்கு வரத்தும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக தனி நபர்கள், கல்வி நிறுவனங்களின் வாகனப்போக்குவரத்தும் நடைபெற வில்லை. இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூன் 30 வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவை ஜூலை 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
25-மே-202017:11:03 IST Report Abuse
Selvaraj Thiroomal காலாண்டு வரியை ரத்து செய்ய வாகன உரிமையாளர்கள் கோரி வருகிறன்றனர். அரையாண்டு வரியையே தள்ளுபடி செய்யவேண்டும். கடந்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் இழப்பீடு கோராத வாகனங்களுக்கு இந்தவருட இன்சூரன்ஸ் காலத்தை ஓராண்டு நீடித்து கொடுக்கலாம். ஆட்டோமொபைல் தொழிலில் இருந்து அரசுகள் ஆண்டுக்கணக்கில் பிடுங்கிக்கொண்டே இருந்து வருகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் பிடுங்கியதில் ஒரு பகுதியை மத்திய மாநில அரசுகள் கொடுத்து உதவவேண்டும்.தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நீடித்து இருக்கும்படி செய்வது ஒருவகையில் அரசுக்கு ஆதாயம் தான். புதியவர்கள் எந்த தொழிலும் இப்போதைக்கு இறங்கமாட்டார்கள் என்பதை அரசு உணரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X