இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
India, Sri Lanka,Pm modi, Modi, Prime Minister modi, Narendra Modi, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona crisis, covid-19 pandemic, Gotabaya, Gotabaya Rajapaksa,
 இந்தியா, இலங்கை, பிரதமர், மோடி, அதிபர்,

கொழும்பு: 'கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்' என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாக, இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக, மோடி அப்போது உறுதி அளித்தார்.

இந்த பேச்சின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 'கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ், 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.


latest tamil news


இது குறித்து, இலங்கை உயரதிகாரிகள் கூறியதாவது:'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி, இந்தியாவிடம், இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது. தற்போது, அதைத் தவிர கூடுதலாக, 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுள்ளார்.

பொருளாதார சிக்கல்களால், நாட்டின் ரொக்க இருப்பு குறைந்து வருவதை சமாளிக்க இந்த உதவியை செய்யுமபடி, கோத்தபய கேட்டுள்ளார். இதைத் தவிர, இலங்கையில் நிறுத்தப்பட்ட துறைமுகப் பணிகளை, இந்தியா விரைவில் துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும், அவர் முன்வைத்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - Mangaf,குவைத்
25-மே-202019:32:23 IST Report Abuse
Shankar இந்திய பெருங்கடலுக்குட்பட்ட பகுதியில் இலங்கையுள்ளதால் பாக்கிஸ்தான், சீன கப்பல் தளவாடம் முதலியான இந்த சமுத்திரத்தினுள் நெருங்க தடைவிதிக்கணும். சீனாவை காண்மித்தே இந்தியாவிடம் கயவாக கயவத்தனமாக கொள்முதல் செய்தது ஏராளம். இலங்கை தன்னை நெருங்கி அனுசரித்த எந்த இந்திய பிரதமர்களிடமும் சீனாவை காண்மித்து பெரும் பலன்களை பெறாமல் விட்டதில்லை. நிஜமாக சொல்லப்போனால் இன்றும் இந்தியாவின் பரம துரோகி இலங்கையே தவிர சீனாவோ அல்லது பாகிஸ்தானோ அல்ல.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
25-மே-202016:42:53 IST Report Abuse
 Sri,India இந்தப்பணத்தை நம்மிடம் வாங்கி விட்டு சீனாக்காரனுக்கு ஸலாம் போடும் நயவஞ்சக கூட்டம் .
Rate this:
Cancel
25-மே-202015:19:34 IST Report Abuse
Prasanna Krishnan Dont help
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X