பொது செய்தி

இந்தியா

தகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா குற்றச்சாட்டு

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Shramik Trains, Odisha,  orissa, indian railways, migrants
, சிறப்பு ரயில், புலம்பெயர், தொழிலாளர்கள், ஒடிசா, விவரங்கள்,

புவனேஸ்வர்: எந்தவித முன் தகவலும் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதனால் புலம்பெயர்ந்தோரின் விவரங்கள் தெரியாமல் அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ஒடிசா மாநில சிறப்பு நிவாரண கமிஷனர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசும், ரயில்வேத்துறையும் முடிவு செய்து புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, மே 3ம் தேதி முதல் 2,55,404 புலம்பெயர் தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மீது, ஒடிசா மாநில சிறப்பு நிவாரண கமிஷனர் பி.கே.ஜெனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மத்திய அரசு, முன்பெல்லாம் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்த விவரங்களை மாநில அரசுடன் பகிர்ந்து கொண்டது. ஆனால், இப்போது எந்தவித முன் தகவலும் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாநிலத்திற்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மாநில அரசு அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனால், மாநிலத்திற்கு வருகைத்தருவோருக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.


latest tamil news


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் ஏறிய ரயில் மற்றும் அவர்கள் வந்த நேரம், இடம் குறித்த விவரங்களை வழங்குமாறு மாநில அரசு கேட்டுக்கொள்கிறது. இதனால் அவர்களை அந்தந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முடியும். ஒடிசாவுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்தோரின் டிக்கெட் கட்டணத்திற்காக மாநில அரசு ரயில்வேக்கு ரூ.55.5 கோடியை வழங்கியுள்ளது. முன் தகவல் இல்லாமல் திரும்பும் மக்கள், இலவச டிக்கெட் வசதியைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-மே-202022:12:44 IST Report Abuse
Loganathan Kuttuva பிஹார் ஒரிஸ்ஸா மாநிலங்களில் வருவோர் எண்ணிக்கை அதிகம்.செல்வோர் மிக மிக குறைவு.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
25-மே-202017:51:41 IST Report Abuse
வாய்மையே வெல்லும் என்னது சீப்பை ஒளித்து வைத்து கல்யாணமும் முடிஞ்சிருச்சா... சொல்லவே இல்ல ?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-202010:50:12 IST Report Abuse
Janarthanan அந்த அந்த மாநில அரசு தான் மற்ற மாநில அரசுடன் தொடர்பு கொண்டு தங்கள் மாநில தொழிலாளர்களை கொண்டு வர இத்தனை ட்ரெயின் வேண்டும் என்று கேட்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு ட்ரெயின் வந்து கொண்டு இருக்கிறது, மாநில அரசிற்கு அவிங்க மாநில தொழிலர்களை பற்றி தெரியாது ஆன மத்திய அரசிற்கு தெரிய வேண்டுமாம்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X