பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,977 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று( மே.,25) காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ல் இருந்து 1,38, 845 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,867 ல் இருந்து 4,021 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,441 ல் இருந்து 57, 721 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 77, 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநிலங்களின் பாதிப்பு விவரம்


மாநிலம்- பாதிப்பு- உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 50,231-1635
தமிழகம் - 16,277-111
குஜராத் - 14,056-858
டில்லி-13,418-261
ராஜஸ்தான்-7,028-163
ம.பி.,-6,665-290
மே.வங்கம்- 3,667-272
ஆந்திரா-2,823-56
பீஹார்-2,587-13
கர்நாடகா-2,089-42
பஞ்சாப்-2,060-40
தெலுங்கானா-1,854-53
காஷ்மீர்-1,321-21
ஒடிசா-1,336-07
ஹரியானா-1,184-16
கேரளா-847-04
அசாம்-378-04
ஜார்க்கண்ட்-317-03
உத்தரகண்ட்-317-03
சத்தீஷ்கர்-238-03
ஹிமாச்சல பிரதேசம்-203-03
திரிபுரா-191-0
கோவா-66-0
லடாக்-52-09
புதுச்சேரி-41-0
அந்தமான்-33-0
மணிப்பூர்-32-0
மேகாலயா-14-01
தாத்ரா நாகர் ஹவேலி-02-0
மிசோரம்-01-0
நாகலாந்து-01-0
அருணாச்சல பிரதேசம்-01-0
சிக்கிம்-01-0


10 இடங்களுக்குள் இந்தியா

இதன் மூலம் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் ஈரானை பின்னுக்கு தள்ளி இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகள் விபரம்
01. அமெரிக்கா
02. பிரேசில்
03. ரஷ்யா
04. ஸ்பெயின்
05. பிரிட்டன்
06. இத்தாலி
07. பிரான்ஸ்
08. ஜெர்மனி
09. துருக்கி
10. இந்தியா

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X