மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்| Hockey icon Balbir Singh Sr passes away | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (8)
Share
மொஹாலி: மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றி ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் இன்று (மே 25) காலமானார்.1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங். 1956ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை 6-1 என்ற கோல்
Hockey Legend, Balbir Singh, Olympic, பல்பீர் சிங், காலமானார், ஒலிம்பிக், ஹாக்கி, ஜாம்பவான்

மொஹாலி: மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றி ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் இன்று (மே 25) காலமானார்.

1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங். 1956ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. கேப்டனான பல்பீர் சிங், இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து சாதனை புரிந்தார். ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்த இச்சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை.


latest tamil news


இதனாலேய இவர் பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். இவர் மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக கடந்த மே 8ம் தேதி மொஹாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் அரை கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் இவர் காலமானதாக மருத்துவமனை இயக்குனர் அபிஜித் சிங் தெரிவித்தார். சிகிச்சையின் போது அவருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X