சென்னையில் மண்டல வாரியாக எவ்வளவு பாதிப்பு| Coronavirus outbreak: Zone wise break up of Chennai | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக எவ்வளவு பாதிப்பு

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share
சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் இதுவரை 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.தமிழகத்தில் நேற்று (மே 24) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையில் மட்டும் 587 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
coronavirus, corona, covid 19, chennai news, chennai coronavirus, coronavirus outbreak,
சென்னை, கொரோனா_பாதிப்பு, மண்டல_வாரியாக

சென்னை: சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் இதுவரை 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் நேற்று (மே 24) புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையில் மட்டும் 587 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 77 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றயை பாதிப்புகள் குறித்து மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


latest tamil news


அதன்படி, சென்னையில், நேற்று அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 70 பேரும், கோடம்பாக்கத்தில் 69 பேரும், தேனாம்பேட்டையில் 64 பேரும், திரு.வி.க.நகரில் 55 பேரும், அடையாறில் 46 பேரும், அண்ணாநகரில் 38 பேரும், அம்பத்தூரில் 31 பேரும், திருவொற்றியூரில் 26 பேரும், வளசரவாக்கத்தில் 24 பேரும், மாதவரத்தில் 10 பேரும், பெருங்குடியில் 16 பேரும், மணலியில் 16 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


மண்டல வாரியாக மொத்த பாதிப்புகளில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 60.02 சதவீதம் ஆண்கள், 39.96 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 30-39 வயதுக்கு உட்பட்ட 1,421 பேரும், 20-29 வயதுக்கு உட்பட்ட 1,362 பேரும் பாதிக்கபட்டுள்ளனர். அதேபோல், பெண்களில் 20-29 வயதுக்கு உட்பட்ட 919 பேரும், 30-39 வயதுக்கு உட்பட்ட 862 பேரும் பாதிக்கபட்டுள்ளனர் .


மண்டல வாரியாக மொத்த பாதிப்பு:


ராயபுரம் - 1981
கோடம்பாக்கம் - 1460
திரு.வி.க.நகர் - 1188
தேனாம்பேட்டை - 1118
தண்டையார்பேட்டை - 1044
அண்ணாநகர் - 867
வளசரவாக்கம் - 703
அடையாறு - 579
அம்பத்தூர் - 446
திருவொற்றியூர் - 300
மாதவரம் - 223
சோழிங்கநல்லூர் - 173
பெருங்குடி - 168
மணலி - 142
ஆலந்தூர் - 121

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X