மலிவான விலையில் கிராஸ் பிரீட் நாய் வாங்க நினைப்பவர்கள் உஷார்| A woman was attacked and killed by her French bulldog mix | Dinamalar

மலிவான விலையில் கிராஸ் பிரீட் நாய் வாங்க நினைப்பவர்கள் உஷார்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (6)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில், சிகாகோவைச் சேர்ந்த உர்சோ என்ற 52 வயதுப் பெண்ணை நாய் கடித்ததை அடுத்து அவர் மரணம் அடைந்துள்ளார். நாய் கடித்து மரணம் அடைந்தது உலகெங்கும் நடக்கும் சாதாரண விஷயம் தானே, இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இவரை கடித்து கொன்றது ராட்விட்ல்லர், நம்மூர் கோம்பை போன்ற பெரிய வகை நாய் அல்ல, டாய் பிரீட் என்று சொல்லப்படும் ஃபிரஞ்சு புல்டாக் வகை நாய்.மனித
Bulldog, dogs, dog bite, trending news

வாஷிங்டன்: அமெரிக்காவில், சிகாகோவைச் சேர்ந்த உர்சோ என்ற 52 வயதுப் பெண்ணை நாய் கடித்ததை அடுத்து அவர் மரணம் அடைந்துள்ளார். நாய் கடித்து மரணம் அடைந்தது உலகெங்கும் நடக்கும் சாதாரண விஷயம் தானே, இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இவரை கடித்து கொன்றது ராட்விட்ல்லர், நம்மூர் கோம்பை போன்ற பெரிய வகை நாய் அல்ல, டாய் பிரீட் என்று சொல்லப்படும் ஃபிரஞ்சு புல்டாக் வகை நாய்.

மனித இனத்துக்கு ஆபத்து என உலகில் தடை செய்யப்பட்ட நாய் வகைகளும் உண்டு. தற்போது ஜெர்மனை சேர்ந்த ராட்வில்லர் என்ற பெரியவகை நாய் இதுவரை பல மனிதர்களை கொலை செய்துள்ளது. இதனை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கத் தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களில் மிகச் சிறிய ரக நாய்களுக்கு டாய் பிரீட் அல்லது டீ கப் பிரீட் எனப் பெயர். இவை மனிதர்களது உயிரைப் பறிப்பது சாத்தியமே இல்லை என நம்பப்படுகிறது. வோடாபோன் விளம்பரத்தில் வரும் பக், இங்லீஷ் புல் டாக், ஷிட் சூ, பிரஞ்சு புல்டாக், சிகுவாகுவா உள்ளிட்ட நாய்களை நம் பாக்கெட்களில் எடுத்து போட்டுக்கொண்டு வாக்கிங் செல்லலாம்.


latest tamil newsஅந்த அளவுக்கு சிறிய நாய் இனங்கள். அமெரிக்கா, ஐரோப்பா பகுதிகளில் ஆடு, மாடுகள் மேய்க்கப் பயன்பட்டவை புல்டாக் என்ற நாய் இனங்கள். இந்த வகை நாய்கள் பணக்கார்கள் மட்டுமே வைத்து இருக்கக் கூடிய விலை உயர்ந்த அரிய நாய்கள். பிரான்சில் உருவாக்கப்பட்ட நாய் இனம் பிரஞ்சு புல் டாக். இது மிகவும் சாது. நம்மூர் புமேரியன் போல வீட்டுக்குள் துள்ளி விளையாடும். நாய் பிரீட்கள் கட்டுப்பாட்டு இனமான அமெரிக்க கேனல் கிளப் அறிக்கைப்படி பிரஞ்சு புல் டாக் 15 கிலோ எடை மட்டுமே இருக்கும். ஆனால் உர்சோ வளர்த்த பிரஞ்சு புல்டால் கலப்பினத்தை சேர்ந்தது. அது 27 கிலோ எடை கொண்ட பெரிய நாய். பொதுவாக கலப்பின நாய்கள் தன் தாய் தந்தையரின் குணங்களை கொண்டு இருக்கும்.


latest tamil news


அதிக லாபம் ஈட்ட நாய் பிரீடர்கள் இன் லைன் பிரீடிங் எனப்படும் ஒரே குடும்பத்துக்குள் நாய்களை பிரீட் செய்வது, கண்ட பிரீட்களுடன் கலப்பு செய்வது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன. இதனால் கலப்பு நாய்கள் பார்ப்பதற்கு பிரஞ்சு புல்டாக் போல இருந்தாலும் அவற்றின் குணம் அதற்கு இருக்காது. தற்போது மிகவும் ஆக்ரோஷமான கலப்பு பிரஞ்சு புல்டாகை மலிவான விலை கொடுத்து உர்சோ வாங்கியது அவரது உயிரைப் பறித்துவிட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X