வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஆன்கரேஜ் நகர் அருகே உள்ளது டெட் ஸ்டிவன் சர்வதேச விமான நிலையம். டென் ஸ்டீவின் என்ற முன்னாள் அமெரிக்க செனேட்டரின் நினைவாக இந்த விமான நிலையத்துக்கு டென் ஸ்டீவன் விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டது. 1951ம் ஆண்டு கட்டப்பட்ட அமெரிக்காவின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான இது, தற்போது கொரோனா காலத்தில் உலக கவனம் பெற்றுள்ளது. எப்படி எனக் கேட்கிறீர்களா?

சர்வதேச சரக்கு விமானங்கள் அதிகளவில் உள்ள விமான நிலையம் இது. இங்கிருந்து அமெரிக்காவின் 90 சதவீத சரக்குகள் டோக்கியோ உள்ளிட்ட ஆசிய நகரங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. மற்ற பயணிகள் விமான நிலையங்கள் கொரோனா காலத்தில் மூடப்பட்டுள்ள இந்நேரத்தில் டென் ஸ்டீவன் விமான நிலையம் படு பிஸியாக உள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், நிவாரண பொருட்களை அளிக்கும் சரக்கு விமானங்கள் இந்த விமான நிலையத்தில் இருந்து செல்கின்றன. இது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE