கொரோனா தடுப்பூசி சோதனைக்கு செல்லும் 4 மருந்துகள்: ஹர்ஷ்வர்தன்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: நான்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பாஜ., மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் சமூக வலைதளத்தில் உரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
Harsh Vardhan, Vaccine, CoronaVirus, Clinical Trial, India, corona vaccine, corona drug, corona, health, health minister, india, union health minister, covid-19, corona patients, corona spread, ஹர்ஷ்வர்தன், தடுப்பூசி, மருந்து, சோதனை, இந்தியா

புதுடில்லி: நான்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பாஜ., மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் சமூக வலைதளத்தில் உரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தியாவில் 14 தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கு வந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும்.


latest tamil news


தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை நீண்ட காலமானது என்பதால், கொரோனா வைரசுக்கு விரைவிலேயே தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது. எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும். எனவே, தடுப்பூசி அல்லது சிகிச்சையை கண்டறியும் வரையில், சமூக விலகல், மாஸ்க் அணிவது, கை மற்றும் உடல் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். அதுவே நோய்க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-மே-202019:31:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி சோதனை எலிகள் நாம தான்.. செத்தா நடுத்தெருவில் தூக்கி போட்டுட்டு போற அளவுக்கு மாத்திட்டாய்ங்க. வரும் அடுத்த மூன்று மாதங்களுக்கு எமனுக்கு மூணு ஷிப்ட் போட்டு வேலை செய்யும் அளவுக்கு உசிரை பிடுங்குற வேலை.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
25-மே-202015:18:44 IST Report Abuse
sundarsvpr சமூக விலகல் மக்களுக்கு இடையே மட்டும் இல்லை. அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். எம் எல் எ, எம் பி பதவிகள் அவசியமா என்பதனை தீர்மானிக்க வேண்டும். மன்ற நடவடிக்கையில் இடைவெளி விட்டு உட்கார கட்டடத்தை இடித்து விஸ்தரிக்கவேண்டும். கூட்டம் கூட்டினால் காலவிரயம். செலவு அதிகமாகும். கொரோனா மறையும் வரை முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் மட்டும் கருது கூறவேண்டும். கொரானாவை பற்றி எந்தவித விவாதங்கள் தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
25-மே-202015:09:40 IST Report Abuse
Nathan உடலும் அம்மையின் எதிர்ப்பு உக்தியை கற்று, மரவாதிருந்தது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X