பொது செய்தி

இந்தியா

தாயை சந்திக்க தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெங்களூரு: ஊரடங்கிற்கு பின்னர் இன்று துவங்கிய உள்நாட்டு பயணிகள் விமான சேவை துவங்கியது. அதில், டில்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனியாக பெங்களூரு வந்து தனது தாயை சந்தித்தான்.



latest tamil news




கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை துவங்கியது. ஊரடங்கிற்கு முன்னர் டில்லி சென்ற 5 வயது சிறுவன் விஹான் சர்மா அங்கு சிக்கி கொண்டான். பெற்றோர்கள் பெங்களூருவில் வசித்தனர். விமான சேவை இன்று துவங்கியதால், அதில் சிறப்பு பிரிவில், டில்லியில் இருந்து பெங்களூரு விமானத்தில் அந்த சிறுவன், மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து தனியாக பயணம் செய்து, 3 மாதங்களுக்கு பிறகு தனது தாயாரை சந்தித்தான்.


latest tamil news


இது தொடர்பாக விஹானின் தாயார் கூறுகையில், எனது 5 வயது மகன் விஹான் சர்மா, டில்லியில்இருந்து தனியாக வந்துள்ளான். 3 மாதத்திற்கு பின்னர் பெங்களூரு வந்தடைந்ததாக தெரிவித்தார்.


latest tamil news




பெங்களூரு விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: விஹானை சொந்த ஊருக்கு வரவேற்கிறோம். அனைத்து பயணிகளும் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
25-மே-202021:17:27 IST Report Abuse
Nalam Virumbi அவன் தனியாக விமானத்தில் வந்தது பெரிதல்ல. தாயை விட்டு பிரிந்திருந்துதான் அதிசயம்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-மே-202019:48:21 IST Report Abuse
Vena Suna அஞ்சு வயது அல்ல சிறுவன்... அஞ்சா வயது சிறுவன் இவன்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-மே-202018:12:20 IST Report Abuse
Endrum Indian என்ன டப்பா இது???5 வயது சிறுவனை டில்லிக்கு அனுப்பியது ஏன்??3 மாதம் அவன் எங்கு இருந்தான்??டில்லியில் உறவுக்காரர் என்றால் அப்பாவா இல்லை சுற்றத்தார்களா???அது என்ன தாய் வரவேற்பது???தந்தை எங்கே விதவையா இல்லை கணவனை பிரிந்தவளா ???இதில் உள்ளே நுழைந்து பார்த்தால் அதன் உண்மை புரியும். பல குழந்தைகள் தனியாக அமெரிக்கா செல்கின்றன - 15,000 கிமீ இந்தியாவிலிருந்து இது ஒன்னும் பெரிய அதிசாயம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X