தாயை சந்திக்க தனியாக பயணித்த 5 வயது சிறுவன்| 5-yr-old boy flies alone from Delhi to Bengaluru to meet his mother | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாயை சந்திக்க தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
பெங்களூரு: ஊரடங்கிற்கு பின்னர் இன்று துவங்கிய உள்நாட்டு பயணிகள் விமான சேவை துவங்கியது. அதில், டில்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனியாக பெங்களூரு வந்து தனது தாயை சந்தித்தான்.கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை

பெங்களூரு: ஊரடங்கிற்கு பின்னர் இன்று துவங்கிய உள்நாட்டு பயணிகள் விமான சேவை துவங்கியது. அதில், டில்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனியாக பெங்களூரு வந்து தனது தாயை சந்தித்தான்.latest tamil news
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை துவங்கியது. ஊரடங்கிற்கு முன்னர் டில்லி சென்ற 5 வயது சிறுவன் விஹான் சர்மா அங்கு சிக்கி கொண்டான். பெற்றோர்கள் பெங்களூருவில் வசித்தனர். விமான சேவை இன்று துவங்கியதால், அதில் சிறப்பு பிரிவில், டில்லியில் இருந்து பெங்களூரு விமானத்தில் அந்த சிறுவன், மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து தனியாக பயணம் செய்து, 3 மாதங்களுக்கு பிறகு தனது தாயாரை சந்தித்தான்.


latest tamil news


இது தொடர்பாக விஹானின் தாயார் கூறுகையில், எனது 5 வயது மகன் விஹான் சர்மா, டில்லியில்இருந்து தனியாக வந்துள்ளான். 3 மாதத்திற்கு பின்னர் பெங்களூரு வந்தடைந்ததாக தெரிவித்தார்.


latest tamil news
பெங்களூரு விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: விஹானை சொந்த ஊருக்கு வரவேற்கிறோம். அனைத்து பயணிகளும் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X