ஊரடங்கு தளர்வினால் அதிகரித்த பாதிப்பு: கெஜ்ரிவால்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share
Advertisement
Arvind Kejriwal, Lockdown, Relaxation, Delhi, Corona Cases, AAP, Delhi CM, Lockdown relaxation, corona, coronavirus, covid-19, corona outbreak, corona updates, corona crisis, corona news, corona cases in Delhi, lockdown 4.0, அரவிந்த் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி, ஊரடங்கு, தளர்வு, கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு

புதுடில்லி: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றால் டில்லியில் இதுவரை 13,418 பேர் பாதிக்கப்பட்டு, 261 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் அறிவித்ததால், பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும் டில்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.


latest tamil news


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லியில் மொத்த பாதிப்பில் 6,540 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் 2,000 புதிய படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் நலம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X