பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைத்து கொள்ள முடிவு

Updated : மே 26, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சீனா, இந்தியா, மாணவர்கள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, அச்சுறுத்தல், china, india, chinese citizen, evacuation, coronavirus, corona, lockdown, travel ban, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, covid-19 pandemic, corona crisis, students, businessmen, tourists

பெய்ஜிங்: இந்தியாவில் தங்கியுள்ள சீனாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா வந்தவர்களை திரும்ப அழைத்து கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல், இரு நாட்டு எல்லையில் பதற்றம் உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா அச்சத்தில் உள்ள சீனர்கள், உடனடியாக சீனா திரும்ப விரும்பும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவ வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தூதரகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யோகா கற்கவும், புத்த மத வழிபாட்டு தலங்களை பார்வையிட வந்தவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். சீனா திரும்ப விரும்புபவர்கள் மே 27 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
விமான கட்டண செலவுகளை பயணிகளே ஏற்று கொள்ள வேண்டும். சொந்த ஊர் திரும்பியதும் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் அல்லது அதன் அறிகுறி இருப்பவர்கள், 14 நாட்கள் காய்ச்சல் மற்றும் சளி இருப்பவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் 37.3 டிகிரி வெப்பநிலைக்கு மேல் உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது. மருத்துவ வரலாற்றை மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சிறப்பு விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்தும், இந்தியாவில் எத்தனை சீனர்கள் உள்ளனர் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anishahamed - Trichy,இந்தியா
27-மே-202016:34:53 IST Report Abuse
anishahamed காரோண அச்சத்திற்கு பின் உலக நாடுகள் சீனா வில் இருந்து தனது தொழில் துறைகளை முற்றிலுமாக வெளியேற செய்ய போகிறது வெளியேறிய நிறுவங்கள் அனைத்தும் இந்தியா விற்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது இதை சீனா பொறுத்துக்கொள்ள முடிய வில்லை இதனால் தான் போர் என சொல்கிறது. சீனா படைகள் தனது அரசாங்கம் காக போரிடும் அனல் இந்திய ராணுவம் தனது தாய் நாட்டிற்காக போரிடும் ஒரு இந்தியா போர் வீரர் மூன்று சீனா போர் வீரர் கு சமம். வெற்றி இந்தியா விற்கே.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
26-மே-202016:56:03 IST Report Abuse
Tamilnesan இது தான் சமயம். அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, ஆஸ்திரிலேயா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட்டுப்படை சீனா மீது தாக்கினால் சீனா இந்தியாவிடம் நிச்சயம் சரண் அடைந்துவிடும். ஏற்கனவே, கொரநா விஷயத்தில் மிக மிக அவப்பெயரை சீனா உலக நாடுகளிடம் சம்பாதித்து வைத்துள்ளது.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
30-மே-202014:10:02 IST Report Abuse
s.rajagopalanரஷ்யா ....?.... நம்ப முடியாது...
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
26-மே-202015:55:35 IST Report Abuse
K.P  SARATHI சீனாவை தாக்குவதில் நம்மில் ஒருமித்த கருத்துவேண்டும், எல்லையோரம் ஒரு பிடி மண்ணை கூட விடாது இராணுவம் அனால் உள்ளுருரில் நம் அரசியல் வாதியிடம் லடச்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X