சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி : வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.latest tamil newsகொரோனா ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு மத்திய அரசு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு சிறப்பு ரயில்களால் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பயனடைகின்றனர். இதற்கு மாநில அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைமேற்கொண்டு பயணிகள் விபரங்கள் மற்றும் ரயில்கள் இயக்கம் குறித்து மத்திய அரசிற்கு தகவல் அனுப்ப வேண்டும். மேலும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன் அவர்களுக்கான பரிசோதனையை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை என மஹா.,முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். மேலும் உத்தவிற்கும் கோயலுக்கும் இடையே சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் இயக்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

இது தொடர்பாக உத்தவ் கூறுகையில், நமது மாநிலத்தில் இருந்து வெளி மாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப தினமும் 80 ரயில்களை நாடுகையில், மத்திய அரசு தினமும் 30 முதல் 40 ரயில்களை மட்டுமே அனுப்புகிறது. தனது அரசாங்கம் இதுவரை 481 ரயில்களில் 7 லட்சம் புலம்பெயர்ந்தோரை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. மாநிலம் 100 சதவீத செலவுகளை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.


latest tamil newsஇந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் பதிவிட்டதாவது : நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி 3000 க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க முன்வந்துள்ளது. ஆயினும் அதற்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். இதற்கு மஹா., அரசு குற்றம் சாட்டுவதில் நியாயமில்லை. மாநிலங்களுக்கு 125 ரயில்களை இயக்குவது தொடர்பாக பட்டியல் எங்கே? 125 சிறப்பு ரயில்களை இயக்க முன்வந்த போதிலும் 46ரயில்களுக்கான பட்டியல் மட்டுமே பெறப்பட்டுள்ளது.


latest tamil newsஅவற்றில் 5 மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு செல்கின்றன. ஆனால் அம்பான் புயல் பாதிப்பு காரணமாக இரு மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவது கடினம். பல மணிநேரங்கள் காத்திருந்தும் மஹா.,அரசிடமிருந்து தொழிலாளர்கள் குறித்த விபரங்களோ , ரயில்கள் தொடர்பான விபரங்களோ அனுப்பப்படவில்லை. ஆயினும் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ரயில்களை இயக்க அரசு தயாராக உள்ளது. உங்களுக்குத் தேவையான ரயில்கள் கிடைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இதற்கிடையில், மஹா.,அரசின் தகுந்த அறிவிப்புகள் இல்லாததால் 65 ரயில்கள் வரை ரத்து செய்ய வேண்டியதாக உள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக, ரயில்களைத் திட்டமிடுவதற்கான பயணிகள் பட்டியலை ரயில் அங்கீகாரங்கள் காத்திருக்கின்றன. சிறப்பு ரயில்களைத் திட்டமிடுவது ஒரு விரிவான செயல்முறையாகும், இதற்கு நேரம் தேவைப்படுகிறது, சரியான நேரத்தில் பட்டியல்கள் வழங்கப்படாவிட்டால், சிறப்பு ரயில்களை முறையாக இயக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
26-மே-202000:19:24 IST Report Abuse
unmaitamil கேரளா அரசு, எங்கள் மக்கள் பல நாடுகளிலும், மாநிலங்களிலும் அவதிப்படுகிறார்கள். கேரளா வரும் மூன்று லட்சம் மக்களுக்கு மருத்துவ, தங்கும் வசதி, உணவு போன்ற எல்லா ஏற்பாடுகளும் தயார். மத்திய அரசு அவர்களை கேரளாவிற்கு கொண்டுவந்தால் மட்டும் போதும் என்று அரசியல் நாடகம் நடத்தியது . புதிதாக யாரும் கேரளாவிற்குள் வராததால் தொற்றுநோய் கட்டுக்குள் அடங்கி இருந்தது. ஆனால் கேரளா அரசோ, நாங்கள் கொரோனாவை அடக்கி விட்டோம். உலகத்துக்கே உதாரணம் கேரளாதான் என்றனர். ஆனால் இப்போது விமானம் மூலமும், கப்பல், ரயில் மூலமும் ஐயாயிரம் பேர் கேரளா வந்த ஒருவாரத்தில் புதிய தோற்று நோய் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரிக்க தொடங்கியதால், இனி புதிதாக யாரும் கேரளவுக்குள் வேண்டாம் என்று கேரளா முதல்வர் மத்திய அரசை கெஞ்சுகிறார், குறை கூறுகிறார். வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் நோய் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாகும் ..
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-202021:04:39 IST Report Abuse
SAPERE AUDE ரயில் மந்திரி திரு பியுஷ் கோயல் மிகவும் திறமைமிக்கவர். அவருக்கு எந்த துறை கொடுத்தாலும் அதை பொறுப்புடன் நடத்துவதில் வல்லவர்.மஹாராஷ்டிர மாநில முதல்வர் பதவி ஆசையில் எதிர் கட்சிகள் ஆதரவில் தனது தகப்பனார் கொள்கைகளை உதறிவிட்டு பதவியில் அமர்ந்து இன்று இந்த மாபெறும் தொற்றுநோயினால் புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சினையை நேற்கொள்ள முடியாமல் குறை கூறிக்கொண்டு இருக்கிறார்.மத்திய மந்திரியுடன் இணைந்து பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதே நல்லது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-மே-202006:20:26 IST Report Abuse
 Muruga VelPiyush Goel has throat problem ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X