மும்பையில் இருந்து தெலுங்கானா திரும்பிய 2 பேருக்கு கொரோனா

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020
Share
Advertisement

ஐதராபாத் : கொரோனா தாக்கத்தால் மும்பையில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த வெளி மாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் கொமரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் மும்பையில் இருந்து திரும்பிய வெளி மாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் பாதிப்புகளை தொடர்ந்து காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.


latest tamil news



பாதிக்கப் பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு அனுப்பப்பட்டது. ஏப்., மாத இறுதியில் 7 பேர் உட்பட மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 9 ஆக இருந்தது. கடந்த மூன்று வாரங்களில் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாவட்டத்திற்கு திரும்பினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X