பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று மட்டும் 549 பேருக்கு கொரோனா

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Chennai, covid19, coronavirus, corona, corona outbreak, corona updates, new corona cases, positive case, corona patient, corona death, corona spread, corona test, corona crisis, covid-19 pandemic, corona in TN, TN districts, india, TN fights corona, சென்னை, கொரோனா

சென்னை: சென்னையில் இன்று(மே 25) மட்டும் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் புதிதாக 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இதுவரை 11,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,135 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 5,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு பலியான 7 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். செங்கல்பட்டில் மற்றொரு பலியானார். சென்னையில், 69 வயது பெண்ணும், 75, 68, 55, 72 மற்றும் 33 வயதுடைய ஆண்களும் இன்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனா பலி 84 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 54 பேருக்க கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. திருவள்ளூரில் 36, காஞ்சியில் 19, திருவண்ணாமலையில் 11, ராமநாதபுரத்தில் 5, விருதுநகர், ராணிப்பேட்டியில் தலா 4, தேனி, கன்னியாகுமரியில் தலா 2, மற்றும் தூத்துக்குடி, திருநெங்வேலி, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் தலா ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
25-மே-202022:01:47 IST Report Abuse
SUDHAKAR சென்னையில் எங்கு பார்த்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். எங்களது அபார்ட்மெண்டில் மாலை எல்லோரும் சேர்ந்து விளையாடுகிறார்கள் மாஸ்க் இல்லாமல். தெருவில் ஐம்பது சதவிகிதம் மக்கள் மாஸ்க் இல்லாமல் திரிகிறார்கள். டீனேஜ் மாணவர்கள் மாஸ்க் இல்லாமல் திரிகிறார்கள். இதில் என்பது எட்டு சதவிகிதம் அசிமாடமாடிக் பரவல் வேறு. வாழக ஜனநாயகம்.
Rate this:
Cancel
25-மே-202021:48:28 IST Report Abuse
ஆப்பு கொரோனாவில் டாப் 10 ல் இந்தியா. அதான் பதவி வாங்கியாச்சே... இனிமே என்ன ஆனாலும். ஒகே.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
25-மே-202020:50:32 IST Report Abuse
Visu Iyer ஏன் சென்னையில் மட்டும் அதிகமாக இருக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X