லஞ்சம் கொடுத்தால் அரசு வேலை : கோவா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சர்ச்சை கேள்வி

Updated : மே 25, 2020 | Added : மே 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
question, Goa Board, class 10, English exam, 'corruption in recruitment', students, education, board exam, english

பானாஜி: கோவாவில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாளில் லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலை பெற முடியாது என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வினாத்தாள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவா மாநில அரசு தேர்வு வாரியத்தின் சார்பில் பத்தாம் வகுப்பு ஆங்கில மொழித்தாள் தேர்வு நடந்தது. இதில் இடம் பெற்றுள்ள ஒரு வினாவில் இரு நபர்கள் உரையாடும் வினா இடம் பெற்றுள்ளது.

அதில் ஒருவர் இங்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது எனவே போர்ச்சுக்கீசியவிற்கு சென்று வேலை பார்க்க பாஸ்போர்ட் வாங்க வந்தேன் என்றார்.உடனே மற்றொருவர் ஆமாம் இங்கு லஞ்சம் கொடுத்தால் தான் அரசு வேலை கிடைக்கும் என்பார். இந்த வாக்கியம் வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil news




கோவா கல்வி வாரியத் தலைவர் கூறியது, “இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வினா தாள் தயாரித்தவர் யார் என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்போம். வினாத் தாளில் உள்ள தவறால் மாணவர்கள் மதிப்பெண் இழக்காத வகையில் உறுதி செய்யப்படும்” என்றார்.கோவா மாநில அரசில் நடக்கும் உண்மையை தான் வினாத்தாளில் குறிப்பிட்டுள்ளனர் என காங். விமர்சித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202000:45:32 IST Report Abuse
தல புராணம் வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் அந்தந்த ஊரு நடப்பை சொல்லி தருவது தானே நல்ல கல்வி. அந்த வகையில் இந்த வினாத்தாளை எடுத்த ஆசிரியரை பாராட்டியே ஆகவேண்டும். இந்தியாவாச்சே, அவருக்கு இனிமேல் நிம்மதி இருக்காது. அதுவும் கோவாவில் ஆட்சி கூட நள்ளிரவில் லஞ்சம், காசு கொடுத்து வாங்கியதாச்சே.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-மே-202000:42:31 IST Report Abuse
தல புராணம் ஹா, ஹா.. இதை தெரிஞ்சிக்க பத்தாம் வகுப்பு படிக்கணும்ன்னு தேவையில்லை. இது கோவாவில் மட்டும் இல்லை, அகில இந்தியாவிலும் என்று. பச்சை குழந்தைக்கு கூட தெரியும். வியாபம் ஊழல், தமிழ்நாட்டின் தறிகெட்ட டி.என்.பி.எஸ்.சி பணி சேர்ப்பு தேர்வுகளும், அதில் கொள்ளையடிக்கப்படும் கோடானுகோடிகளும் என்று..
Rate this:
Cancel
Anandhan - London,யுனைடெட் கிங்டம்
25-மே-202023:16:56 IST Report Abuse
Anandhan "அரசு" வேலை என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X